தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் வெளியானது!

இந்தவிழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

news18
Updated: July 17, 2019, 7:35 PM IST
தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் வெளியானது!
ராம்நாத் கோவிந்த், ரஞ்சன் கோகாய், ரவி சங்கர் பிரசாத்
news18
Updated: July 17, 2019, 7:35 PM IST
உச்ச நீதிமன்றத்தின் 100 முக்கிய வழக்குகளின் தீர்ப்புகள் தமிழ் உள்பட 9 மாநில மொழிகளில் மொழிப் பெயர்த்து வெளியிடப்பட்டது. அதனை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பெற்றுக்கொண்டார்.

உச்ச நீதிமன்றத்தில் புதிய கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது. புதிய கட்டடத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்துவைத்தார். இந்தவிழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அந்த விழாவில் உச்ச நீதிமன்றத்தின் 100 முக்கிய வழக்குகளின் தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதனை ராம்நாத் கோவிந்த் பெற்றுக்கொண்டார்.
Loading...இதுகுறித்து ராம்நாத் கோவிந்த் ட்விட்டர் பதிவில், ‘உச்ச நீதிமன்றத்தின் 100 முக்கியமான வழக்குகளின் தீர்ப்புகள் மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதை பெற்றுக்கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் பல்வேறு மாநில மொழிகளில் கிடைக்கும். ஆங்கிலம் தெரியாத இந்தியக் குடிமகன்கள் இதனை எளிதில் அணுக முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Also see:

First published: July 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...