ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான மறுசீராய்வு மனு நீதிமன்றத்தில் இன்று விசாரனை!

விசாரணை இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டுமென மத்திய அரசு நேற்று உச்சநீதிமன்றத்தில் கோரியது.

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான மறுசீராய்வு மனு நீதிமன்றத்தில் இன்று விசாரனை!
ரஃபேல் போர் விமானம்
  • News18
  • Last Updated: April 30, 2019, 1:04 PM IST
  • Share this:
ரஃபேல் விவகாரம் தொடர்பான மறுசீராய்வு வழக்கில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசு கூடுதல் அவகாசம் கேட்டது தொடர்பான விசாரணை, உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகின்றனர்.

இது தொடர்பான வழக்கில் இந்த ஒப்பந்தம் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிடமுடியாது என உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா, பிரசாந்த் பூஷண், அருண் ஷோரி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.


ரஃபேல் விவகாரம் தொடர்பாக பிரபல ஆங்கில நாளிதழில் வெளியான சில ஆவணங்களை மறுசீராய்வு மனுவில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பான விசாரணை இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டுமென மத்திய அரசு நேற்று உச்சநீதிமன்றத்தில் கோரியது.

இன்று நடைபெறவுள்ள விசாரணையில் மத்திய அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டால் வழக்கின் விசாரணை தள்ளிப்போக வாய்ப்புள்ளது.Also see...

First published: April 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading