”4 வாரத்தில் பணத்தை செலுத்தாவிட்டால் சிறை” அனில் அம்பானிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

எரிக்சன் நிறுவனத்திற்கு ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் தர வேண்டிய நிலுவைத் தொகையை நீதமன்றம் உத்தரவுக்குப் பிறகும் செலுத்தாமல் காலதாமதம் செய்து வந்தது.

”4 வாரத்தில் பணத்தை செலுத்தாவிட்டால் சிறை” அனில் அம்பானிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான அனில் அம்பானி (Image:PTI)
  • News18
  • Last Updated: February 20, 2019, 2:28 PM IST
  • Share this:
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் எரிக்சன் நிறுவனத்திற்கு 450 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை அவமதிப்பு செய்ததால் அனில் அம்பானியை குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

எரிக்சன் நிறுவனத்திற்கு ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் தர வேண்டிய நிலுவைத் தொகையை நீதிமன்றம் உத்தரவுக்குப் பிறகும் செலுத்தாமல் காலதாமதம் செய்து வந்தது.

இந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ரஃபேல் ஒப்பந்தத்திற்கு முதலீடு செய்யப் பணம் உள்ளது. ஆனால் நீதிமன்ற உத்தரவுப் படி தங்களுக்குத் திருப்பி அளிக்க வேண்டிய 550 கோடி ரூபாய் பணத்தைத் திருப்புச் செலுத்தாமல் தாமதப்படுத்தி வருகிறது என்று எரிக்சன் நிறுவனம் சார்பில் அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.


இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அடுத்த 4 வாரத்திற்குள் எரிக்சன் நிறுவனத்திற்கு 450 கோடி ரூபாயை அனில் அம்பானி திருப்பிச் செலுத்தவில்லை என்றால் சிறை செல்ல வேண்டியிருக்கும்.

இந்த வழக்கில் அனில் ஒரு குற்றவாளி, மேலும் இந்தக் காலக்கெடுவிற்குள் எரிக்சன் நிறுவனத்திற்குச் சேரவேண்டிய நிலுவைத்தொகையைத் திருப்பிச் செலுத்தவில்லை என்றால் ஒரு ஆண்டுக்கு 12 சதவீத வட்டியும் சேர்த்து செலுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனால் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன பங்குகள் இன்று 6.64 சதவீதம் சரிந்து 5.61 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.மேலும் பார்க்க: பாகிஸ்தான் பொருட்களுக்கு வரி 200% ஆக உயர்வு - அருண் ஜெட்லி அதிரடி
First published: February 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading