அரிய வகை விலங்குகள், பறவைகள் குறித்த வழக்கு: மத்திய அரசின் திட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

அரிய வகை பறவைகள் மற்றும் விலங்குகளை செல்லப்பிராணிகளாக வளர்த்துவருபவர்கள் தானாக முன்வந்து அந்த விவரங்களை அளித்தால் தண்டனை இல்லை என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அரிய வகை விலங்குகள், பறவைகள் குறித்த வழக்கு: மத்திய அரசின் திட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி
உச்ச நீதிமன்றம் (கோப்புப்படம்)
  • Share this:
அரியவகை பறவைகள் மற்றும் விலங்குகளை செல்லப்பிராணிகளாக வீட்டில் வளர்ப்பவர்கள், தாங்களாகவே முன்வந்து இந்த ஆண்டின் ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்தில் அரசிடம் தெரிவித்தால் அவர்களிடம் எந்த விதமான சட்டநடவடிக்கையும் எடுக்கப்படாது என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு எதிராக தினேஷ் சந்திரா என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ‘இதற்கு முன்னரும் பலமுறை அம்னெஸ்டி ஸ்கீம் எனப்படும், தாமாகவே முன்வந்து தகவல்களைத் தெரிவிப்பவர்கள் மீது எந்த சட்டநடவடிக்கைகளும் எடுக்காமல் இருக்கும்முறை பின்பற்றப்பட்டுள்ளது. தாமாக முன்வந்து தகவல்களை அளிப்பவர்களிடம் விசாரணை செய்யநேர்ந்தால், அது இந்த திட்டத்தின் ஒட்டுமொத்த நோக்கத்தையும் சிதைத்துவிடும். பெரும்பான்மை மக்களின் விருப்பத்தின் காரணமாக குறிப்பிட்ட காலத்துக்கு இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது’ என்று விளக்கமளித்தது.

இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், ‘ஜூன்- டிசம்பர் மாத காலத்தில் அரியவகை விலங்குகள் மற்றும் பறவைகள் வைத்திருப்பது குறித்து தன்னிலையாக வந்து தகவல் தெரிவித்தால் அவர்கள் மீது எந்த சட்டநடவடிக்கையும், விசாரணையும் இருக்காது என்பதை உறுதி செய்தது. அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.


அந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த அமர்வு, ‘அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிப்படுத்தியது.
First published: November 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading