முகப்பு /செய்தி /இந்தியா / ஆளுநர் தமிழிசைக்கு எதிராக தெலங்கானா அரசு வழக்கு... உச்ச நீதிமன்றம் விசாரிக்க ஒப்புதல்!

ஆளுநர் தமிழிசைக்கு எதிராக தெலங்கானா அரசு வழக்கு... உச்ச நீதிமன்றம் விசாரிக்க ஒப்புதல்!

தெலங்கானா ஆளுநர் தமிழிசை

தெலங்கானா ஆளுநர் தமிழிசை

தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிரான வழக்கு விசாரணை வரும் 27ஆம் தேதிக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

தெலங்கானா மாநிலத்தில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையில் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் உள்ளார். அவருக்கும் ஆளும் அரசுக்கும் தொடர்ச்சியாக மோதல் போக்கு நிலவி வருகிறது.

ஆளுநர் தமிழிசையின் செயல்பாடுகளுக்கு தொடர்ச்சியாக தெலங்கானா அரசு விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. ஆளுநர் மாளிகையில் குடியரசு தின விழா கொடியேற்ற நிகழ்வை கூட முதலமைச்சர் சந்திரசேகர ராவ் புறக்கணித்தார்.

சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி, தெலங்கானா தலைமைச் செயலாளர் சாந்திகுமாரி சார்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: ரேசன் கார்டு குழப்பம்.. ஆதார் இருந்தாலே இனி போதும்.. விரைவில் வருகிறது புது சேவை?

ஆளுநரின் இச்செயலை அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள உரிமைகளுக்கு எதிரான செயல் என அறிவிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மனு வரும் 27ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

First published:

Tags: Supreme court, Tamilisai Soundararajan, Telangana