Rafale Deal Case: பொதுநலன் வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

Rafale Deal Case: பொதுநலன் வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை
உச்ச நீதிமன்றம்
  • News18
  • Last Updated: October 9, 2018, 7:04 PM IST
  • Share this:
ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 126 ரஃபேல் விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்ட நிலையில் அந்த ஒப்பந்தம் இறுதியாகவில்லை. அடுத்து பாஜக ஆட்சிக்கு வந்ததும் 36 ரஃபேல் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. போர் விமானங்களின் உதிரி பாகங்களை தயாரிக்கும் ஒப்பந்தம், ரிலையன்ஸ் குழுமத்திற்கு வழங்கப்பட்டது.

பிரான்ஸ் நாட்டிலிருந்து 36 ரஃபேல் ரக விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை எழுப்பினர்.


மேலும், இந்தியா - பிரான்ஸ் இடையேயான நல்லுறவுக்கு ரஃபேல் ஒப்பந்தம் ஒரு சிறந்த உதாரணமாகும். ரஃபேல் விமானத்தின் தயாரிப்பு, அதன் விலை உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் இந்தியாவுக்கு சாதகமான ஒப்பந்தமாகவே  அமைந்துள்ளது. அதேசமயத்தில், உள்நாட்டு பாதுகாப்பு, இரு நாட்டு நல்லுறவு உள்ளிட்ட அம்சங்களைக் கருத்தில்கொண்டு ரஃபேல் விமானத்தின் விலையை வெளியிட முடியாது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமும் அளித்திருந்தார்.

இந்நிலையில், தொடந்து இந்த விவகாரம் தொடர்பாக பல கருத்துகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், ரஃபேல் விமான கொள்முதல் விவகாரம் தொடர்பாக 3 பொதுநலன் வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் நாளை விசாரணைக்கு வருகின்றன.
First published: October 9, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading