காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு! உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

ஜம்மு பகுதியின் சில மாவட்டங்களிலும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகக்குழுவினர் சுதந்திரமாக சென்று வருவதற்காக, கட்டுப்பாடுகளை விலக்கக்கோரி பத்திரிகை ஆசிரியர் ஒருவரும் வழக்கு தொடர்ந்து உள் ளார்.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு! உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
ஜம்மு காஷ்மீர்
  • News18
  • Last Updated: August 16, 2019, 9:05 AM IST
  • Share this:
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை இல்லாத நிலையில் அந்த அதிகாரம் நாடாளுமன்றத்தின் கீழ் வருகிறது என்ற அடிப்படையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலைப் பெற்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது.

மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பகுதிகளாக பிரிக்கப்பட்டது. காஷ்மீர் அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காஷ்மீரில் கொந்தளிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக, அப்பகுதி முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. தொலைதொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.


அதனையடுத்து, காஷ்மீர் தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் இந்த நடவடிக்கைகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. குறிப்பாக சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து எம்.எல்.சர்மா என்ற வழக்கறிஞர் மனுத் தாக்கல் செய்துள்ளார். காஷ்மீர் சட்டசபையின் ஒப்புதல் இல்லாமல் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அவர் தனது மனுவில் குற்றம் சாட்டி உள்ளார்.

இதைப்போல காஷ்மீரிலும், ஜம்மு பகுதியின் சில மாவட்டங்களிலும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகக்குழுவினர் சுதந்திரமாக சென்று வருவதற்காக, கட்டுப்பாடுகளை விலக்கக்கோரி பத்திரிகை ஆசிரியர் ஒருவரும் வழக்கு தொடர்ந்து உள் ளார்.

கடந்த 4-ந் தேதி முதல் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளதால் காஷ்மீரின் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக அவர் தனது மனுவில் குற்றம்சாட்டி இருந்தார்.இதைத்தவிர காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது சட்டவிரோதமானது என அறிவிக்கக்கோரி தேசிய மாநாடு கட்சி தலைவரும், முன்னாள் சபாநாயகருமான முகமது அக்பர் லோன் மற்றும் சிலரும் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

இந்த வழக்குகள் அனைத்தும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எஸ்.ஏ.நசீர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது. ஏற்கெனவே, கடந்த சில தினங்களுக்கு காஷ்மீர் பகுதியில் பிறக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை நீக்க வேண்டும் என்று உச்ச நீதமன்றத்தில் தொடர்ந்த மத்திய அரசுக்கு அவகாசம் அளிக்கவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

Also see:

First published: August 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்