சபரிமலை தீர்ப்புக்குப் பின்னரே CAA வழக்குகள் விசாரிக்கப்படும் - தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே

"சிஏஏ, மதம் சம்பந்தப்பட்ட வழக்காக இருப்பதால் உடனடியாக விசாரணை செய்ய முடியாது என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது"

சபரிமலை தீர்ப்புக்குப் பின்னரே CAA வழக்குகள் விசாரிக்கப்படும் - தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே
தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே!
  • Share this:
சபரிமலை வழக்கின் தீர்ப்புக்குப் பின்னரே குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே கூறியுள்ளார்.

ஏபரல் மாதம் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான நடவடிக்கைகள் தொடங்க இருப்பதால் அதற்கு முன்னதாக குடியுரிமை சட்டத் திருத்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞரான கபில் சிபல் வேண்டுகோள் விடுத்தார்.

அதற்கு பதிலளித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, “ சிஏஏ வழக்குகள் அனைத்தும் பல்வேறு தரப்பு மக்களின் மத சுதந்திர வரம்பு தொடர்புடையதாக இருப்பதால் அதனை உடனடியாக விசாரணை செய்ய முடியாது. முதலில் சபரிமலை வழக்குகளை விசாரணை செய்து தீர்ப்பு வழங்கிவிட்டு சிஏஏ தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்” என்று கூறினார்.


சிஏஏ சம்பந்தமான போராட்டங்கள் இந்தியா முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also see...
First published: March 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading