ஹோம் /நியூஸ் /இந்தியா /

பணமதிப்பு நடவடிக்கை.. 57 பேர் மனுதாக்கல்.. உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

பணமதிப்பு நடவடிக்கை.. 57 பேர் மனுதாக்கல்.. உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

பணமதிப்பு நடவடிக்கையில் இன்று தீர்ப்பு

பணமதிப்பு நடவடிக்கையில் இன்று தீர்ப்பு

இந்த வழக்குகளை நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தனர். நீதிமன்ற வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் பரபரப்பான இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அப்துல்நசீர், பி.ஆர்.கவாய், போபண்ணா, ராமசுப்ரமணியம், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளிக்க உள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம்தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தது. இதனால் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக 57 பேர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்குகளை நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தனர். நீதிமன்ற வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் பரபரப்பான இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

ஏற்கனவே நீதிமன்றம் 2016இல் அறிவிக்கப்பட்ட இந்த பணமதிப்பிழப்பு கொள்கை தொடர்பான அனைத்து ஆவணங்கள் சமர்ப்பிக்குமாறு மத்திய மற்றும் ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்டது. மேலும் மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்தும் முறையை உச்சநீதிமன்றம் வேடிக்கை பார்க்காது எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Black money, Demonetisation, Money, Supreme court judgement