ஹோம் /நியூஸ் /இந்தியா /

சிறைச்சாலைகளை தனியார் கார்ப்ரேட் நிறுவனங்கள் கட்டித் தரலாமே.. அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை

சிறைச்சாலைகளை தனியார் கார்ப்ரேட் நிறுவனங்கள் கட்டித் தரலாமே.. அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

கார்ப்ரேட் நிறுவனங்கள் சிறைகளை கட்டி அதன் செலவை அரசிடம் சமர்ப்பித்து வரி விலக்கையும் பெற்றுக்கொள்ளலாம் என்று யோசனை தெரிவித்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  நாட்டில் சிறைச்சாலைகளைத் தனியார் கார்ப்ரேட் நிறுவனங்கள் கட்டித் தரலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சமூக செயல்பாட்டாளர் கவுதம் நவல்கா நாட்டின் சிறைச்சாலைகள் குறித்து தொடர்ந்த பொதுநல வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதி கேஎம் ஜோசப் மற்றும் ஹரிஸ்ரீகேஷ் ராய் ஆகியோரின் அமர்வு விசாரித்தது. செயல்பாட்டாளர் கவுதம் சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜரானார்.

  இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு சிறைத்துறை மற்றும் சிறைக்கு மிகக் குறைந்த கவனத்தை தருகிறது. நாட்டில் விசாரணை கைதிகள் எண்ணிக்கையானது மிக அதிகமாக உள்ளது. சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளதால் நெருக்கடியான சூழலால் நிலவுகிறது. கணிசமான ஜெயில்களில் ஆயுர்வேத மருத்துவர்கள் மட்டுமே உள்ளன. ஐரோப்பிய சிறைத்துறை நிர்வாகத்திற்கு தனியார் கொள்கை வைத்துள்ளனர். அதேபோல் கார்ப்ரோட் சமூக பொறுப்பு என்ற கொள்கையும் உள்ளது.

  இந்த யோசனையின் அடிப்படையில் தனியார் பெருநிறுவனங்களை கார்ப்ரேட் அமைப்புகளை பெரிய சிறைசாலைகள் கட்டித் அரசு நடவடிக்கை மேற்கொள்ளலாம். கார்ப்ரேட் சமூக பொறுப்பின் அடிப்படையில் இதை மேற்கொள்ளலாம். இந்த நிறுவனங்கள் சிறைகளை கட்டி அதன் செலவை அரசிடம் சமர்ப்பித்து வரி விலக்கையும் பெற்றுக்கொள்ளலாம் என்று யோசனை தெரிவித்தனர். இதன் மூலம் அரசின் எண்ணப்படி பொதுமக்களின் வரிப்பணம் செலவு மிச்சமாகும் என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

  இதையும் படிங்க: 2023-ல் மீண்டும் ஆட்சியை பிடிப்பதே இலக்கு - சச்சின் பைலட்

  வழக்கு விசாரணையில் நார்வே, ஸ்வீடன் போன்ற நாடுகளில் உள்ள சிறைசாலை வசதிகளை சுட்டிக்காட்டிய நீதிபதிகள்,இது போன்ற இந்தியாவில் வசதி செய்வது நடைமுறை சாத்தியமற்றது என்றார். அதேவேளை, இந்தியாவில் சில சிறைகளில் விலங்குகளை விட மோசமான முறையில் கைதிகள் நடத்தப்படுவதாக கவலை தெரிவித்தனர். கைதிகளை மனித தன்னை அற்ற முறையில் நடத்துவதை அரசு கவனித்து சீர் செய்ய வேண்டும் என்றார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Corporate, Jails, Supreme court