• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • டிரைலரில் இருந்த பாட்டு படத்தில் இல்லை என நஷ்டஈடு கேட்ட நபர்: பட தயாரிப்பு நிறுவனத்துக்கு நீதிமன்றம் கண்டனம்!

டிரைலரில் இருந்த பாட்டு படத்தில் இல்லை என நஷ்டஈடு கேட்ட நபர்: பட தயாரிப்பு நிறுவனத்துக்கு நீதிமன்றம் கண்டனம்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ரைலரில் இடம்பெற்றிருந்த பாடல் படத்தில் இல்லாததால் மன உளைச்சல் அடைந்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதாக எண்ணிய அஃப்ரீன் ஃபாத்திமா மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

  • Share this:
    டிரைலரில் இடம்பெற்ற பாடல் காட்சி படத்தில் இல்லை என்பதற்காக நஷ்ட கேட்ட வழக்கில் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் வழங்கிய தீர்ப்புக்கு உச்ச  நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

    மகாராஷ்டிராவின்  அவுரங்கபாத்தை சேர்ந்த  அஃப்ரீன் ஃபாத்திமா ஜைதி என்பவர் கடந்த 2016ம் ஆண்டு  ஷாருக்கான் நடித்த ‘ஃபேன்’ (Fan)  திரைப்படத்தின் ஜப்ரா ஃபேன் (Jabra Fan) பாடலை ட்ரைலரில் பார்த்துள்ளார். இதையடுத்து தனது குழந்தைகளுடன் திரையரங்குக்கு சென்று படம் பார்த்துள்ளார். அப்போது, டிரைலரில் இடம்பெற்றிருந்த பாடல் படத்தில் இல்லாததால் மன உளைச்சல் அடைந்துள்ளார்.

    தான் ஏமாற்றப்பட்டதாக எண்ணிய அஃப்ரீன் ஃபாத்திமா மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். எனினும் அவரது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மகாராஷ்டிர நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த ஆணையம், வழக்கு செலவுடன் சேர்த்து அஃப்ரீன் ஃபாத்திமாவுக்கு ‘ஃபேன்’ திரைப்படத்தை தயாரித்த யாஷ் ராஜ் (Yash raj films) ஃபிலிம்ஸ் 15 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கடந்த 2017ம் ஆண்டு உத்தரவிட்டது. இதனை 2020ம் ஆண்டு தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் உறுதி செய்தது.

    இந்த உத்தரவை எதிர்த்து யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர், “தேசிய நுகர்வோர் நீதிமன்றத்தின் உத்தரவு தடை செய்யப்பட வேண்டும் என்றும் இந்த தீர்ப்பு ஒட்டுமொத்த திரையுலகையும் பாதிக்கும் என்றும் வாதிட்டார்.

    இதையும் படிங்க: எம்.எஸ்.சி படித்துவிட்டு துப்புரவு பணியாளர் பணி: உதவிக்கரம் நீட்டிய அரசு!


    இதையடுத்து, தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. அதேவேளையில், பட தயாரிப்பு நிறுவனத்துக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள்,  திரைப்படத்தில் இல்லாத எதையாவது பட தயாரிப்பு நிறுவனங்கள் டிரைலரில்  காண்பிப்பதுதான் இங்கு பிரச்சனை, படத்தின் விளம்பரத்திற்கானது என்றால் படத்தை பாடலுடன் சந்தைப்படுத்தியது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.

    படத்தின் விளம்பரத்தில் காட்டப்படும் ஒரு பாடலை விரும்பி, அந்த விருப்பத்தின் காரணமாக படம் பார்க்க செல்லும் ஒருவர் படத்தில் குறிப்பிட்ட பாடல் இல்லை என்றால்  விரக்தியடைவதோடு, ஏமாற்றப்பட்டதாகவும் உணர்வார் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: