முகப்பு /செய்தி /இந்தியா / எல்லாவற்றையும் மதக் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் - தப்லீக் ஜமாத் விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் கண்டனம்

எல்லாவற்றையும் மதக் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் - தப்லீக் ஜமாத் விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் கண்டனம்

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

தப்லீக் ஜமாத் விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் கொரோனா வைரஸ் முதல் அலை பரவத் தொடங்கியது. முதல் அலை பரவத் தொடங்கிய சமயத்தில் டெல்லியில் இஸ்லாமிய சமூகத்தினரின் தப்லீக் ஜமாத் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் பங்கேற்ற பலருக்கு கொரோனா இருந்தது. அதனால், தப்லீக் மாநாடு கொரோனா க்ளஸ்டராக அடையாளம் காணப்பட்டது. கொரோனா ஜிகாத் என்ற வார்த்தைப் பதங்களைப் பயன்படுத்தி இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் செய்யப்பட்டது. சில ஊடகங்களிலும் தப்லீக் ஜமாத் கூட்டம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது.

இதுகுறித்து ஜாமியத் உலமா ஐ ஹிந்த் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அதில், “தப்லீக் ஜமாத் மத மாநாட்டின் மூலம்தான் கொரோனா பரவியது என்று பொய்யான செய்திகளை வெளியிடுகிறார்கள். அந்தச் செய்தியை நிறுத்த உத்தரவிட வேண்டும். அதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று தெரிவித்திருந்தனர். இந்த மனு தலைமை நீதிபதி என்.வி.ரமனா முன்பு விசாரணைக்கு வந்தது.

இதுகுறித்து தெரிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ‘ஏன் இது நடைபெறுகிறது என்று எனக்குத் தெரியவில்லை. எல்லாமே மதக் கண்ணோட்டத்தில் கொடுக்கப்படுகிறது. இணையதள ஊடகங்கள் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. நீங்கள் யூட்யூப் தளத்துக்குச் செல்லுங்கள். நீங்கள் எண்ணற்ற போலிச் செய்திகளைக் காண முடியும் மற்றும் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன.

யாருவேண்டுமானாலும் இதனைச் செய்யலாம். பிரச்சினை என்னவென்றால், இந்த நாட்டில் ஒவ்வொன்றையும் ஊடகங்களில் சில பிரிவு வகுப்புவாதக் கண்ணோட்டத்தில் பார்க்கிறது. இது தேசத்துக்கு மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்துகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வெப் சேனல்கள், ட்விட்டர், ஃபேஸ்புக், யூடியூப், போன்ற சமூக ஊடகங்களிடம் சாமானிய மக்கள், நீதிபதிகள் ஏதும் புகார்கள் அளித்தால் அவர்களுக்கு பதில் அளிப்பதில்லை. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மட்டும்தான் சமூக ஊடகங்கள் பதில் அளிக்கின்றன’ என்று காட்டமாக விமர்சனம் செய்தார்.

First published:

Tags: Supreme court