தெலுங்கு, கன்னடா உள்ளிட்ட ஆறு மொழிகளில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு! தமிழுக்கு இடம் இல்லை

2017-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ‘நீதிமன்றத் தீர்ப்புகள் மாநில மொழிகளிலும் வெளியிடப்படவேண்டும்’ என்று பேசியிருந்தார்.

தெலுங்கு, கன்னடா உள்ளிட்ட ஆறு மொழிகளில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு! தமிழுக்கு இடம் இல்லை
உச்ச நீதிமன்றம்
  • News18
  • Last Updated: July 3, 2019, 9:48 AM IST
  • Share this:
உலக வரலாற்றில் முதன்முறையாக, ஒரு நாட்டின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஐந்து மேற்பட்ட மொழிகளில் வெளியிடப்படவுள்ளது.

உலக நாடுகள் முழுவதும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள், ஆங்கிலத்தில் வெளியிடப்படும் அல்லது அந்த நாட்டின் மொழியில் வெளியிடப்படும். இந்தியா பல மொழிகளைக் கொண்டுள்ள நாடாக இருந்துவரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுவருகின்றன.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள், ஆங்கிலத்தில் அதன் இணையத்தில் பதிவேற்றப்படுகின்றன. தற்போது, வழக்கு முடிந்து ஆங்கிலத்தில் தீர்ப்பு பதிவேற்றப்படும் அதே நேரத்தில் ஆங்கிலம் தவிர, இந்தி, தெலுங்கு, கன்னடா, அசாம், ஒடியா ஆகிய ஐந்து மொழிகளிலும் தீர்ப்பை பதிவேற்றம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விரைவில் மற்ற மொழிகளிலும் தீர்ப்புகள் வெளியாக ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து வெளியான தகவலின்படி, உச்ச நீதிமன்றத்தின் மின்னணு மென்பொருள் அணியால் உருவாக்கப்பட்டுள்ள மென்பொருளின்(software)உதவியுடன் தீர்ப்புகளை மொழியாக்கம் செய்து இணையத்தில் பதிவேற்றுவதற்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஒப்புதல் அளித்துள்ளார். ஒரு வாரம் முதல் 10 நாள்களுக்குள் தீர்ப்புகள் ஆறு மொழிகளில் பதிவேற்றம் செய்யப்படும் என்று தெரிகிறது.

2017-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ‘நீதிமன்றத் தீர்ப்புகள் மாநில மொழிகளிலும் வெளியிடப்படவேண்டும்’ என்று பேசியிருந்தார். அதன் அடிப்படையிலேயே இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து தெரிவித்த உச்ச நீதிமன்ற வட்டாரத்தினர், ‘இந்த நாட்டில் முதன்முறையாக, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மாநில மொழிகளில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது’ என்றனர்.இந்த குறிப்பிட்ட ஐந்து மொழிகள் ஏன் தேர்வு செய்யப்பட்டது என்ற கேள்விக்கு, ‘மாநில உயர் நீதிமன்றங்களிலிருந்து உச்ச நீதிமன்றத்துக்கு வரும் மேல்முறையீடுகளின் அடிப்படையில், இந்த மொழிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தொடக்கத்தில், தனிப்பட்ட நபர்களின் வழக்குகள், குற்ற வழக்குகள், சொத்து தகராறு, திருமணம் தொடர்பான வழக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஏனென்றால், வழக்குத் தொடுப்பவர்களுக்கு எளிதாக மொழி புரிவதற்காக இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது’ என்று தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், செய்தியாளர்ளிடம் அதிகாரப்பூர்வ மற்ற முறையில் பேசும்போது, ‘விரைவில் தீர்ப்புகள் பல மாநில மொழிகளிலும் வெளியாவது உறுதி செய்யப்படும்’ என்ற விருப்பத்தைக் காட்டியிருந்தார்.

Also see:

First published: July 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்