மபி-யில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி பாஜக வழக்கு: முதலமைச்சர், சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

பாஜக, காங்கிரஸ் கொடிகள் (கோப்புப்படம்)
- News18 Tamil
- Last Updated: March 17, 2020, 4:00 PM IST
மத்திய பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி பாஜக தொடர்ந்த வழக்கில் முதலமைச்சர் கமல்நாத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 22 பேர் பதவி விலகியதைத் தொடர்ந்து முதலமைச்சர் கமல்நாத்தை பெரும்பான்மையை நிரூபிக்க நேற்றே ஆளுநர் உத்தரவிட்டார்.
இதன்படி சட்டப்பேரவை நேற்று காலை கூடிய நிலையில், கொரோனா அச்சம் காரணமாக பேரவை வரும் 26ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதனால், உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பாஜக தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் ஹேமந்த் குப்தா அமர்வு, மனு தொடர்பாக சபாநாயகர், முதலமைச்சர் கமல்நாத் மற்றும் அரசின் முதன்மைச் செயலாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
Also see:
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 22 பேர் பதவி விலகியதைத் தொடர்ந்து முதலமைச்சர் கமல்நாத்தை பெரும்பான்மையை நிரூபிக்க நேற்றே ஆளுநர் உத்தரவிட்டார்.
இதன்படி சட்டப்பேரவை நேற்று காலை கூடிய நிலையில், கொரோனா அச்சம் காரணமாக பேரவை வரும் 26ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதனால், உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பாஜக தரப்பில் மனு அளிக்கப்பட்டது.
Also see: