கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் - தமிழகம் உட்பட 10 மாநிலங்களிடம் விபரங்களை கேட்கும் உச்சநீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

பல மாநிலங்களின் கணக்குகள் குழந்தைகள் நல ஆணையத்துக்கு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா தொற்றின் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் விபரங்களை திங்கள் கிழமைக்குள் வழங்க வேண்டும் என 10 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  தெலங்கானா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் ஆகிய 10 மாநிலங்கள் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான திட்டங்களை செயல்படுத்த செயலாளர் மட்டத்திலான அதிகாரிகளை நியமிக்க வேண்டும். குழந்தைகளின் விபரங்களை மத்திய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டும். மத்திய அரசானது பி.எம் கேர் நிதியம் மூலம் இந்த குழந்தைகளுக்காக வகுத்துள்ள திட்டங்கள் அனைத்தையும் திங்கள் கிழமைக்குள் தெரிவிக்கும்படியும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  இன்று குழந்தைகள் காப்பகங்கள் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்த ஆண்டு முதல் 9346 குழந்தைகளின் பெற்றோர் கொரொனாவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பல மாநிலங்களின் கணக்குகள் குழந்தைகள் நல ஆணையத்துக்கு கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதல்கட்டமாக 10 மாநிலங்களில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் விபரங்களை திங்கள் கிழமைக்குள் ஆணையத்துக்கு தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: