அதிகாரிகள் நீதிபதிகளாகிவிட்டால் நீதிமன்றம் எதற்கு? - உச்சநீதிமன்றம் கண்டனம்..

அதிகாரிகள் நீதிபதிகளாகிவிட்டால் நீதிமன்றம் எதற்கு? - உச்சநீதிமன்றம் கண்டனம்..
உச்ச நீதிமன்றம்
  • News18 Tamil
  • Last Updated: February 14, 2020, 12:14 PM IST
  • Share this:
நிலுவைத் தொகை வசூலிக்கப்படும் வரை, நீதிமன்ற உத்தரவை நிறுத்தச்சொன்ன மத்திய தொலைதொடர்பு துறையின் உரிம நிதிப்பிரிவுக்கு, உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிலுவைத் தொகையைச் செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய மத்திய தொலைத்தொடர்புத் துறை அதிகாரிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றம். தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சேவை மூலம் கிடைக்கும் வருமானம் மட்டுமின்றி வாடகை, சொத்துக்களை விற்பது ஆகியவற்றின் மூலமாக கிடைக்கும் வருமானமும் மொத்த வருமானத்தில் கணக்கிட்டு, உரிம கட்டணம் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் நிலுவை வைத்துள்ள 90,000 கோடிக்கும் அதிகமான கடந்த ஜனவரி 23-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தற்போது வரை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அத்தொகையை முழுமையாகச் செலுத்தவில்லை. இதற்கிடையே, நிலுவைத் தொகை வசூலிக்கப்படும் வரை நடவடிக்கை எடுக்க வேண்டாம் என தொலைதொடர்பு துறையின் உரிம நிதிப்பிரிவு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தது.இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஷ்ரா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, "உச்சநீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. உச்சநீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைக்கும் அதிகாரி யார்? நீதிமன்றத்தில் எப்படி வேலை செய்வது? நிலுவைத்தொகை செலுத்தாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என உத்தரவு பிறப்பித்த அதிகாரி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக அவரை சிறைக்கு அனுப்ப நேரிடும்", என கடும் கண்டனத்தை மத்திய தொலைதொடர்பு அமைச்சகத்திற்கு நீதிபதி அருண் மிஷ்ரா தெரிவித்தார். அதன்பின்னர், மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் மற்றும் ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பி, வழக்கு விசாரணையை மார்ச் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Also See...
First published: February 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்