முகப்பு /செய்தி /இந்தியா / அதிமுக பொதுக்குழு வழக்கு : வேட்புமனு இறுதி நாளுக்குள் தீர்ப்பு? - உச்சநீதிமன்ற நீதிபதிகள் புதிய தகவல்!

அதிமுக பொதுக்குழு வழக்கு : வேட்புமனு இறுதி நாளுக்குள் தீர்ப்பு? - உச்சநீதிமன்ற நீதிபதிகள் புதிய தகவல்!

உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் முறையீடு

உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் முறையீடு

இடைத்தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்வதில் சிக்கல் இருப்பதாகக் கூறி நீதிபதிகளிடம் ஈபிஎஸ் தரப்பு வைத்த கோரிக்கைக்கு நீதிபதிகள் பதிலளித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

இடைத்தேர்தலில் அதிமுகவின் வேட்புமனுவைத் தேர்தல் ஆணையம் ஏற்க மறுப்பதால் அதிமுக பொதுக்குழு வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக் கோரி ஈ.பி.எஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பு மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம், உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில் அதிமுக பொதுக்குழு வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளதால், இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்தைத் தேர்தல் ஆணையம் ஏற்க மறுப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து பிப்ரவரி 7ஆம் தேதிக்குள் ஈரோடு இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய ஏதுவாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து வேட்புமனு தாக்கலுக்கான இறுதி நாள் உள்ளிட்ட தேதிகளைக் கேட்டறிந்த நீதிபதிகள் வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி நாளுக்குள் உத்தரவுகள் வரவில்லை என்றால் இடைக்கால நிவாரணம் வழங்குவது தொடர்பாக முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

மேலும், எழுத்துப்பூர்வ முறையீட்டுக் கோரிக்கை வழங்கவும், மீண்டும் திங்கள்கிழமை முறையீடு செய்யவும் அறிவுறுத்தியுள்ளனர்.

First published:

Tags: ADMK, Supreme court