• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பிச்சை எடுப்பதற்கு தடைவிதிக்க முடியாது - எவரும் விருப்பப்பட்டு பிச்சை எடுக்கவில்லை: உச்ச நீதிமன்றம்

பிச்சை எடுப்பதற்கு தடைவிதிக்க முடியாது - எவரும் விருப்பப்பட்டு பிச்சை எடுக்கவில்லை: உச்ச நீதிமன்றம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

பிச்சை எடுப்பதை வசதி படைத்தவர்கள் கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது. பிச்சை எடுப்பதற்கு தடைவிதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

  • Share this:
    கொரோனா காலத்தில் டிராபிக் சிக்னல், சந்தைப் பகுதி, பொது இடங்களில் பிச்சை எடுப்பவர்களைத் தடை செய்யக் கோரி டெல்லியைச் சேர்ந்தவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

    அவரது மனுவில், “நாடு முழுவதும் உள்ள பிச்சை எடுப்பவர்கள், வீடில்லாதவர்கள், நிலையான இருப்பிடம் இல்லாதவர்கள் பொது இடங்களில் பிச்சை எடுப்பதற்குத் தடை விதிக்க வேண்டும். அதேவேளையில் அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

    இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘பிச்சை எடுக்கத் தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் அழுத்தமாகக் கோரிக்கை வைக்கிறார். ஆனால், அவர்கள் ஏன் பிச்சை எடுக்கிறார்கள் எனத் தெரியுமா? மக்கள் தெருக்களில் பிச்சை எடுக்க வறுமையே காரணம். வாழ்வாதாரமின்றி பிச்சைஎடுக்கிறார்கள். உச்ச நீதிமன்றமாக நாங்கள் மேல்தட்டு பார்வையைக் கொள்ளமாட்டோம். பிச்சை எடுப்பதைத் தடை செய்ய முடியாது.

    எவரும் விருப்பப்பட்டு பிச்சை எடுக்கவில்லை. இது சமூக, பொருளாதாரப் பிரச்சனை. பிச்சை எடுப்பதற்காக மக்கள் வீதிகளில் இறங்குவது அவர்களின் அடிப்படை வாழ்வாதாரத்தைக் காட்டுகிறது. இது ஒரு சமூக, பொருளாதாரப் பிரச்சனை. ஒரு ஆணையால் இதை சரி செய்ய முடியாது. மனிதாபிமான முறையில்தான் இதை அணுகவேண்டும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பிச்சை எடுப்பவர்கள், வீடற்றவர்கள், நிலையான இருப்பிடம் அற்றவர்களுக்கும் மறுவாழ்வு அளிக்கவும், கொரோனா தடுப்பூசி செலுத்தவும் வைத்த கோரிக்கையை ஏற்கிறோம். இதுதொடர்பாக, மத்திய அரசும், டெல்லி அரசும் பதிலளிக்கவேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: