Home /News /national /

ஜெயலலிதா மரண வழக்கு : அப்போலோ தரப்பு மீண்டும் அவகாசம் கோரக் கூடாது - உச்ச நீதிமன்றம்

ஜெயலலிதா மரண வழக்கு : அப்போலோ தரப்பு மீண்டும் அவகாசம் கோரக் கூடாது - உச்ச நீதிமன்றம்

ஜெயலலிதா

ஜெயலலிதா

இந்த மனுக்கள் மீதான விசாரணை 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன.

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரண வழக்கை விசாரித்துவரும ஆறுமுகசாமி ஆணைய விசாரணை வழக்கை தள்ளிவைக்கும்படி அப்போலோ மருத்துவமனை விடுத்த கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மீண்டும் அவகாசம் கோரக் கூடாது என்று அப்போலோ தரப்புக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. அப்போலோ மருத்துவமனையின் மேல்முறையீட்டைத் தொடர்ந்து விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனு, நீதிபதி அப்துல் நசீர் அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

    அப்போது, விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அரியமா சுந்தரம் வலியுறுத்தினார். அப்போது குறுக்கிட்ட தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, ஆணையத்தின் விசாரணை ஒரு மாதத்தில் நிறைவடைந்து, அறிக்கை தாக்கல் செய்யும் நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார். எனவே, தடையை நீக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

    மேலும், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை, அப்போலோ மருத்துவமனை வழக்கறிஞர் முடக்கி வருவதாகவும் தமிழ்நாடு அரசு சார்பில் குற்றம்சாட்டி வாதிடப்பட்டது.

    அத்துடன், இந்த மனுக்கள் மீதான விசாரணை 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. இந்த மனுக்களை விசாரிக்க சிறிது நேரமே போதுமானது. ஆனாலும் ஏன் இந்த மனுக்கள் விசாரிக்கப்படாமல் உள்ளன என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. விசாரணையில் வாதங்களை முன்வைக்க முன் தயாரிப்புடன் வர வேண்டும் என்றும் வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதிட்டார்.

    Must Read : கூடங்குளத்தில் மேலும் ஒரு அணுக்கழிவு மையத்துக்கு மத்திய அரசு அனுமதி - பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கண்டனம்

    இதையடுத்து, விசாரணையை அக்டோபர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், மீண்டும் அவகாசம் கோரக் கூடாது என்று அப்போலோ தரப்புக்கு திட்டவட்டமாக தெரிவித்தனர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Apollo, Arumugasamy commission, Jayalalithaa, Supreme court

    அடுத்த செய்தி