ரஃபேல் விவகாரத்தில் மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்!

இந்து பத்திரிகையில் வெளியான ஆவணங்கள் அடிப்படையிலேயே ரஃபேல் விமான ஒப்பந்தம் குறித்த விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Web Desk | news18
Updated: April 10, 2019, 12:37 PM IST
ரஃபேல் விவகாரத்தில் மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்!
ரஃபேல் ஊழல்
Web Desk | news18
Updated: April 10, 2019, 12:37 PM IST
சீராய்வு மனுக்களை ஏற்கக்கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்து, ரஃபேல் தொடர்பாக சமர்பிக்கப்பட்ட ஆவணங்கள் மீது விரிவான விசாரணை தேவை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் இல்லை என்று கடந்த டிசம்பர் மாதத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், ரஃபேல் வழக்கில் பல உண்மைகளை மத்திய அரசு மறைத்துள்ளதால், தீர்ப்பை மறுசீராய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், திருடுபோன ரஃபேல் தொடர்பான ஆவணங்கள் அடிப்படையில்தான் இந்து பத்திரிகை தகவல் வெளியிட்டது என வாதிட்டார். பாதுகாப்புத்துறையின் ரகசிய ஆவணங்களை நகல் எடுத்திருப்பது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் தேசிய பாதுகாப்பை கருதி அந்த ஆவணங்களை ஆதாரங்களாக எடுக்கக் கூடாது என்றும் அவர் வாதிட்டார்.

விமான ஒப்பந்தத்தில் பாதுகாப்புத்துறையின் நடவடிக்கையை தவிர தஸால்ட் நிறுவனத்துடன் பிரதமர் அலுவலகம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியதற்கான ஆவணங்களை இந்து பத்திரிகை வெளியிட்டது. மேலும் பிரதமர் அலுவலகத்தின் தலையீட்டிற்கு பாதுகாப்புத்துறை அமைச்சக அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தற்கான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் மனுதாரர் அருண் ஷோரி வாதிட்டார்.

இதனைத் தொடர்ந்து, இன்று தீர்ப்பளித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு, ரஃபேல் தொடர்பான புதிய ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடத்தக் கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தது. மேலும், இந்து பத்திரிகையில் வெளியான ரஃபேல் ஆவணங்களை கவனத்தில் கொள்ளக்கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கையையும் நிராகரித்த தலைமை நீதிபதி, இந்து பத்திரிகையின் ஆவணங்கள் அடிப்படையிலேயே விரிவான விசாரணை நடைபெறும் என தெரிவித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

Also see... பிரதமர் மோடி உடன் சிறப்பு நேர்காணல்!


Also see... பிரதமர் மோடியை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர்: நாராயணசாமி


Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...