• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • தேர்தல் பத்திரங்களுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு- பிரஷாந்த் பூஷன் வாதம் எடுபடவில்லை

தேர்தல் பத்திரங்களுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு- பிரஷாந்த் பூஷன் வாதம் எடுபடவில்லை

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

தமிழ்நாடு, மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறுவதால் அரசியல் கட்சிகள் நன்கொடை வசூலிக்க ஏதுவான தேர்தல் பத்திரங்களுக்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து வழக்கைத் தள்ளுபடி செய்தது.

  • Share this:
    தமிழ்நாடு, மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறுவதால் அரசியல் கட்சிகள் நன்கொடை வசூலிக்க ஏதுவான தேர்தல் பத்திரங்களுக்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து வழக்கைத் தள்ளுபடி செய்தது.

    இது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான அமர்வு, 2018-ல் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது, 2019, 2020-ல் இந்தத் திட்டம் தடையின்றி செயல்படுத்தப்பட்டது, எனவே அதை தடைசெய்ய எந்த ஒரு காரணமும் இல்லை என்று தடைக்கு மறுத்து விட்டது.

    ஜனநாயகச் சீர்த்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு என்ற என்.ஜி.ஓ அமைப்பு இந்த வழக்கை தொடர்ந்தது. அதாவது சட்டமன்ற தேர்தல்களை முன்னிட்டு ஏப்ரல் 1 முதல் 10ம் தேதி வரை தேர்தல் பத்திரங்களை விற்கத் தடை கோரியது, இவர்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் ஆஜராகி வாதாடினார்.

    அதாவது, “போலி நிறுவனங்களின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு சட்ட விரோத பணம் கைமாறும் இது தேர்தல் நேரத்தில் அதிகமாகும் எனவே தடை விதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.

    ஆனால் அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால், தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்ற பிறகே தேர்தல் பத்திர விற்பனை தொடங்கப்பட்டது என்றார்.

    தேர்தல் ஆணையமும் தேர்தல் பத்திரங்களை ஆதரிப்பதாக தெரிவித்தது, இதில் ரொக்கப்பரிவர்த்தனை இல்லை என்ற அளவில் ஏற்கத்தக்கது என்று கூறியது.

    ஆனால் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வசூலிப்பதற்கு தேர்தல் ஆணையமும், ரிசர்வ் வங்கியும் எதிர்த்து வந்தன என்று என்.ஜி.ஓ அமைப்பு வாதிட்டது பயனற்று போனது.

    இது தொடர்பாக என்.ஜி.ஓ கூறும்போது, “சில அரசியல் கட்சிகள் பயனடையுமாறு சட்டவிரோத விற்பனை சாளரம் உருவாக்கப்பட்டதாக ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவலில் தெரியவந்துள்ளது. எனவே அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநில சட்டமன்றத் தேர்தலின்போது சட்ட விரோத பணப்புழக்கம், நன்கொடை அதிகரிக்கும்” என்று தன் மனுவில் கூறியிருந்தது.

    ஆனாலும் இதனை தடை செய்ய முகாந்திரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.

    முன்னதாக விசாரணையின் போது, தலைமை நீதிபதி போப்டே, “உதாரணமாக, ஒரு அரசியல் கட்சி தேர்தல் பத்திரங்கள் மூலம் வசூலிக்கும் நன்கொடையைக் கொண்டு ஒரு பெரிய போராட்டத்திற்கு நிதியுதவி அளிக்க முடியும் என்றாலோ, கலவரத்தை தூண்ட முடியும் என்றாலோ அந்தப் பணம் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான அரசுக் கட்டுப்பாடுகள் என்ன? அரசு உண்மையில் கட்டுப்பாட்டில் இருக்கிறதா?

    ஒரு கட்சி தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.100 கோடி நன்கொடை திரட்டுகிறது என்றால், இதை முழுதும் அரசியல் நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்துகிறது என்று எப்படி கூற முடியும்? பயங்கரவாதத்தைத் தூண்டினால்? நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட வாய்ப்பிருக்கிறது, ஆகவே அரசாங்கம் இது குறித்து கவனமேற்கொள்ள வேண்டும்.

    பெரிய கட்சிகள் அல்லது தேர்தல் பத்திரத்தின் மூலம் நன்கொடை வசூல் வேட்டையில் ஈடுபடும் கட்சிகள் தங்கள் அரசியல் திட்டங்களுக்கு வெளியேயும் நிதியைப் பயன்படுத்த முடியும். தேர்தல் செலவினங்களோடு சேர்த்து ஒரு பெரிய வன்முறையான ஆர்ப்பாட்டத்தையே அரங்கேற்றலாமே?” என்று தலைமை நீதிபதி போப்டே சரமாரிக் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

    ஆனால் கடைசியில் தடை செய்ய முகாந்திரம் இல்லை என்று வழக்கைத் தள்ளுபடி செய்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: