Home /News /national /

மனைவியைக் கட்டாயப்படுத்தி உறவு கொண்டால் குற்றமா? - மத்திய அரசிடம் கருத்து கேட்கும் உச்ச நீதிமன்றம்

மனைவியைக் கட்டாயப்படுத்தி உறவு கொண்டால் குற்றமா? - மத்திய அரசிடம் கருத்து கேட்கும் உச்ச நீதிமன்றம்

காட்சிப்படம்

காட்சிப்படம்

திருமண உறவில் கட்டாயப்படுத்தி பாலியல் உறவு கொள்வது குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India
    பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது இந்தியாவின் மிகப்பெரும் பிரச்னையாக உள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்களால் நிகழ்த்தப்படுகிறது. திருமணமான பெண்கள் பலரும் சொந்த கணவனாலேயே கட்டாயப்படுத்தி பாலியல் உறவு கொள்ளும் சூழலும் உள்ளது.

    பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 375-ல், மனைவி 15 வயதுக்குட்பட்டவராக இல்லாவிட்டால், கணவன், தனது மனைவியை கட்டாயப்படுத்தி பாலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமை குற்றமாகாது என்ற விதிவிலக்கு உள்ளது.

    இந்த விதிவிலக்கை நீக்கக் கோரி தொடரப்பட்ட பல்வேறு மனுக்களை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் சி.ஹரி ஷங்கர் மற்றும் ராஜீவ் ஷக்தேர் ஆகியோர், கடந்த மே 11-ம் தேதி இருவித தீர்ப்புகளை வழங்கினர்.

    சட்டப் பிரிவு 375-ல் இருக்கும் இந்த விதிவிலக்கு சட்டவிரோதமானது என்றும், ஆண் - பெண் சமத்துவத்தை உறுதிப்படுத்தும் சட்டப் பிரிவு 14-க்கு எதிரானது என்றும் கூறி, அந்த விதிவிலக்கை நீதிபதி ராஜிவ் ஷக்தேர் ரத்து செய்து உத்தரவிட்டார்.

    மற்றொரு நீதிபதியான ஹரி ஷங்கர், சட்டப்பிரிவு 375-ல் இருக்கும் விதிவிலக்கு சட்டவிரோதமானது அல்ல என தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். சமத்துவம், பேச்சு சுதந்திரம், வாழ்க்கை மற்றும் சுதந்திரம் தொடர்பான அரசியலமைப்பு உரிமைகளை அது மீறவில்லை என்றும் அவர் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.

    உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவேறு தீர்ப்புகள் பிறப்பித்த நிலையில் வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு விசாரணைக்குச் சென்றது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகர்த்தனா, அஜய் ராஸ்தோகி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், ‘திருமண உறவில் கட்டாய பாலியல் உறவு கொள்வது குறித்த வழக்கை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் விசாரிப்பதாக தெரிவித்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தனது கருத்தை தெரிவிக்க வேண்டும். வழக்கு அடுத்தமுறை விசாரணைக்கு வரும் போது மத்திய அரசு தனது முடிவைத் தெரிவிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
    Published by:Archana R
    First published:

    Tags: Rape, Supreme court

    அடுத்த செய்தி