கர்நாடகாவில் தற்போதைய நிலையே நீடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

போதிய கால அவகாசம் வேண்டும் என்று கூறி சபாநாயகர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Web Desk | news18
Updated: July 12, 2019, 1:20 PM IST
கர்நாடகாவில் தற்போதைய நிலையே நீடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
உச்ச நீதிமன்றம்
Web Desk | news18
Updated: July 12, 2019, 1:20 PM IST
எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரத்தில் , முடிவெடுக்க கால அவகாசம் வேண்டும் என்று கர்நாடகா சபாநாயகர் வேண்டுகோள் விடுத்ததையடுத்து, உச்ச நீதிமன்றம் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. 

கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா மீது சபாநாயகர் முடிவெடுக்காததை எதிர்த்து எம்.எல்.ஏ.க்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதிகள், நேற்று மாலைக்குள் முடிவெடுக்க அறிவுறுத்தியிருந்தனர். ஆனால், போதிய கால அவகாசம் வேண்டும் என்று கூறி சபாநாயகர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.


இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணைக்கு வரும் வரை, எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா அல்லது தகுதி நீக்கம் ஆகிய முடிவுகளை எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள், தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதற்கிடையே, கர்நாடக சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில், ஆளும் அரசுக்கு பெரும்பான்மை இல்லததால் முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்கட்சியான பாஜக முழக்கங்கள் எழுப்பி வருகிறது.

First published: July 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...