One Nation One Ration: ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம்: மாநில அரசுகளுக்கு கெடு விதிப்பு!

மாதிரிப் படம்

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான உணவை உறுதி செய்ய  மாநிலங்கள் கேட்கும் கூடுதல்  தானியங்களை  மத்திய அரசு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

  • Share this:
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை ஜூலை 31ஆம் தேதிக்குள் அமல்படுத்த வெண்டும் என மாநில, யூனியன்பிரதேச அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. 

ரேஷன் கார்டு மூலம் நாட்டின் எந்த பகுதியிலும் உணவு பொருட்களை பெற்றுக்கொள்ள வகை செய்யும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை இந்தியா முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.  ஒருசில மாநிலங்கள் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தன. எனினும், தற்போது ஒன்றன் பின் ஒன்றாக மாநிலங்கள் இந்த திட்டத்தில் இணைந்து வருகின்றன.

மேலும் படிக்க:  காஷ்மீர், லடாக் தனித் தனி நாடுகளா? சர்ச்சை வரைபடத்தையடுத்து ட்விட்டர் நிர்வாகி மீது வழக்கு..

இந்நிலையில்,  புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்னை குறித்த வழக்கை  உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை மாநில, யூனியன் பிரதேச அரசுகள் ஜூலை 31ம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்குவது குறித்து மாநில அரசுகள் திட்டம் வகுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திய உச்ச நீதிமன்றம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான உணவை உறுதி செய்ய  மாநிலங்கள் கேட்கும் கூடுதல்  தானியங்களை  மத்திய அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

இதையும் படிங்க: ஜெட் வேகத்தில் உயரும் பெட்ரோல்,டீசல் விலை: மத்திய பெட்ரோலிய அமைச்சர் மீது வழக்கு..


மேலும்,  தேசிய தகவல் மையம் (என்.ஐ.சி) உடன் கலந்தாலோசித்து அமைப்புசாரா தொழிலாளர்கள் / புலம்பெயர்ந்தோரை பதிவு செய்வதற்காக இணையதளத்தை உருவாக்க வேண்டும் என  மத்திய அரசை நீதிபதிகள் அறிவுறுத்தினர். இந்த இணையதளம் உருவாக்கும் பணிகளை ஜூலை 31ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.  இந்த ஆண்டின் இறுதிக்குள் அமைப்புசாரா தொழிலாளர்கள்/ புலம்பெயர்ந்தோர்களை பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.  மேலும், புலன்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சமூக சமையலறைக் கூடம் அமைத்து உணவு வழங்க வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
Published by:Murugesh M
First published: