ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை நீக்கும் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையிட முடியுமா?

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை நீக்கும் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையிட முடியுமா?

உச்ச நீதிமன்றம் (கோப்புப் படம்)

உச்ச நீதிமன்றம் (கோப்புப் படம்)

2014-ம் ஆண்டு முதல் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கும் முடிவை தனது தேர்தல் வாக்குறுதியாகவே அறிவித்துவந்த பாஜக, தற்போது அதை செயல்படுத்தியுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

இந்திய அரசியலமைப்பில் இருந்தே ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையிட வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி நிலவுகிறது.

கடந்த 2015-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவது தொடர்பான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த அன்றைய தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து, ‘அந்த உரிமை முற்றிலும் நாடாளுமன்றத்தின் முடிவைப் பொறுத்தது மட்டுமே. இதில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது’ என்றே தீர்ப்பு வழங்கினார்.

ஆனால், ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் சட்டப்பிரிவு 370 என்பது நிரந்திரமானது என்றும் இந்திய அரசால் இதை நீக்கவோ மாற்றவோ முடியாது என்றும் அதே 2015-ம் ஆண்டு ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தது. அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ஜம்மு காஷ்மீரின் மாநில அரசின் ஒப்புதல் இன்றி இந்திய அரசால் சிறப்பு அந்தஸ்து சட்டத்தை மாற்ற உரிமை அளிக்கப்படவில்லை.

ஆனால், மத்திய அரசின் சார்பில் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட அம்மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. சுதந்திர இந்தியாவின் முதல் நாடாளுமன்ற ஆட்சியின்போதே, ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டுமே இணைந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.

2014-ம் ஆண்டு முதல் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கும் முடிவை தனது தேர்தல் வாக்குறுதியாகவே அறிவித்துவந்த பாஜக, தற்போது அதை செயல்படுத்தியுள்ளது.

மேலும் பார்க்க: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்டப்பிரிவை ரத்து செய்வதால் என்ன மாற்றம் ஏற்படும்?

Published by:Rahini M
First published:

Tags: Article 370, Jammu and Kashmir, Kashmir