தலைமை நீதிபதி மீது புகார் அளித்த பெண்ணுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

பெண் அளித்த பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க போப்டி தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைமை நீதிபதி மீது புகார் அளித்த பெண்ணுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
நீதிபதி ரஞ்சன் கோகாய்.
  • News18
  • Last Updated: April 24, 2019, 10:37 AM IST
  • Share this:
வருகிற ஏப்ரல் 26-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது புகார் அளித்த பெண்ணுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் புகார் அளித்தார். அந்தப் புகார் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை விசாரிக்க 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வை ரஞ்சய் கோகாய்க்கு அடுத்த நிலையிலுள்ள நீதிபதி எஸ்.ஏ.போப்டி நியமித்துள்ளார்.


இதுதொடர்பாக பாலியல் புகார் அளித்த பெண்ணுக்கு போப்டி அடங்கிய குழு கடிதம் அனுப்பி உள்ளது. வெள்ளிக்கிழமையன்று, இந்த வழக்கின் முதல் விசாரணை தொடங்கவுள்ளது. உச்ச நீதிமன்ற செயலாளரிடம் எல்லா ஆவணங்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மற்ற நீதிமன்ற வழக்குகள் போன்று நடைபெறாது. இந்த வழக்கு விசாரணைக்கு கால அளவு நிர்ணயிக்கப்படவில்லை. வழக்கு விசாரணையில் வெளிவரும் தகவல்களைப் பொறுத்து, விசாரணை காலம் நிர்ணயிக்கப்படும். இந்த வழக்கு விசாரணை மிகவும் ரகசியமானது’  என்று எஸ்.ஏ.போப்டி தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு குறித்த விசாரணையை போப்டி குழு சற்று நேரத்தில் விசாரிக்க இருந்தது. இதற்கிடையில், வருகிற ஏப்ரல் 26-ம் தேதி நேரில் ஆஜராகுபடி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது புகார் அளித்த பெண்ணுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.Also see... உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகார்! வெள்ளிக் கிழமை முதல் விசாரணை

Also see... குண்டுவெடிப்பால் ஏற்பட்ட சேதங்களை சிறிசேனா பார்வையிட்டார்


Also see...




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்