• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • நீட் தேர்வு பாடத்திட்டம் : மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

நீட் தேர்வு பாடத்திட்டம் : மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

நீட் தேர்வு

நீட் தேர்வு

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு பாடத்திட்டத்தில் கடைசி நேரத்தில் மாற்றங்கள்.

  • Share this:
    சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் செய்தது தொடர்பாக, மத்திய அரசு, தேசிய தேர்வுகள் ஆணையம் மற்றும் தேசிய மருத்துவ ஆணையம் ஆகியவை பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு பாடத்திட்டத்தில் கடைசி நேரத்தில் மாற்றங்கள் செய்தது தொடர்பாக, முதுநிலை மருத்துவ படிப்பு முடித்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பிரதீக் ரஸ்தோகி உள்ளிட்ட 41 மருத்துவர்கள் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நடைபெற்றது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் ஆஜராகி, கடைசி நேரத்தில் இப்படியான மாற்றங்கள் மேற்கொண்டது பல தரப்பினரையும் பாதிக்கக்கூடியது என வாதிட்டார்.

    வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு, தேசிய தேர்வுகள் ஆணையம் மற்றும் தேசிய மருத்துவ ஆணையம் ஆகியவை பதில் அளிக்க உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணையை செப்டம்பர் 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

    இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதை போலவே, உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான நீட் - எஸ்.எஸ். நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு வாரியம் மற்றும் தேசிய மருத்துவ ஆணையம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. நடப்பாண்டுக்கான நீட் - எஸ்.எஸ். நுழைவுத் தேர்வு நவவம்பர் மாதம் 13 - 14ஆம் தேதிகளில் நடைபெற இருப்பதாக ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது.

    Must Read : 11ம் வகுப்பில் அறிவியல் பிரிவில் சேருவதற்கான முக்கிய உத்தரவை திரும்பப் பெற்றது சிபிஎஸ்இ!

    இந்த தேர்வு முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, அதற்கான அறிவிப்பு ஆகஸ்டில் வெளியானது.தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு, தேர்வுக்கு இரண்டு மாதங்கள் உள்ள நிலையில், தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்வது சட்ட விரோதம் என்று கூறி, 41 முதுநிலை மருத்துவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: