அடுத்த வாரம் முதல் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

மாதிரிப் படம்

பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணை ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 • Share this:
  ‘பெகாசஸ்’ உளவு மென்பொருள் மூலம் முக்கிய நபர்களின் செல்போன் போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாயின. அதன்படி, இந்தியாவில் 300க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டவர்களின் ஃபோன்களும் ஒட்டுக்கேட்கப்பட்டதாக புகார்கள் எழுந்தது.

  இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெகாசஸ் செயலி மூலம் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தால் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடர்ந்து முடங்கி வருகிறது. பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றன. அதனால் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

  Pegasus : ‘பெகாசஸ்’ ஒட்டு கேட்பு விவகாரம் - தலைமை நீதிபதிக்கு 500க்கும் மேற்பட்ட கடிதங்கள்
  இந்நிலையில் நாட்டையே உலுக்கியுள்ள இந்த பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் நீதிமன்றக் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. ஜான் பிரிட்டாஸ் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஏற்கெனவே இதேபோன்ற கோரிக்கையை முன்வைத்து, இந்து குழுமத்தைச் சேர்ந்த என்.ராம், வழக்கறிஞர் எம்.எல். சர்மா ஆகியோரும் மனுத்தாக்கல் செய்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அந்த மனுவில், ‘இந்த விவகாரம் தனிமனித அந்தரங்கம் மற்றும் தேசப் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் சம்மந்தப்பட்டது என்பதால் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தப்படவேண்டும். ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. அந்த வழக்கை அவசர வழக்காக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கைவைத்த நிலையில், ‘ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Karthick S
  First published: