நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கிவிட்டது..! ஆளுநர் முடிவுக்கு நீதிபதிகள் கண்டனம்

கொலைக் குற்றவாளி சாஹியை தண்டனைக் காலத்துக்கு முன்னதாகவே ஆளுநர் விடுதலை செய்துள்ளது, மனசாட்சியை அதிர்ச்சியடையச் செய்துள்ளது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Web Desk | news18
Updated: December 4, 2018, 12:29 PM IST
நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கிவிட்டது..! ஆளுநர் முடிவுக்கு நீதிபதிகள் கண்டனம்
ராம் நாயக்
Web Desk | news18
Updated: December 4, 2018, 12:29 PM IST
கொலைக் குற்றவாளியை தண்டனைக் காலம் முடிவதற்கு முன்னதாகவே விடுதலை செய்தது உச்ச நீதிமன்றத்தின் மனசாட்சியை அதிர்ச்சியடையச் செய்துள்ளது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் 1987-ம் ஆண்டு அரசியல்வாதிகளைக் கொலை செய்த வழக்கில் மார்கண்டேய சாஹி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த வழக்கில் 2009-ம் ஆண்டு கோரக்பூர் நீதிமன்றம் மார்கண்டேய சாஹிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

மேலும், அவர் மீது பல்வேறு கொலை வழக்குகளும் உள்ளன. இந்தநிலையில், 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரப் பிரதேச ஆளுநர் ராம் நாயக், அரசியலமைப்புச் சட்டம் 161 பிரிவில் ஆளுநர்களுக்கு வழங்கியுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தண்டனைக் காலத்துக்கு முன்னதாகவே சாஹியை விடுதலை செய்தார்.

உத்தரப் பிரதேச ஆளுநரின் இந்த முடிவை எதிர்த்து மஹந்த் சங்கரேசன் ராமானுஜ் தாஸ் என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த மனுவில், குற்றவாளி சாஹிக்கு ஆதரவாக யோகி ஆதித்யநாத் அரசு செயல்படுகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

உச்ச நீதிமன்றம்


இதுதொடர்பான வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஆளுநரின் முடிவு ஏற்றுக்கொள்ளத்தக்கது என்று யோகி ஆதித்யநாத் அரசு தெரிவித்தது. அந்த வழக்கில், ‘சாஹியை விடுதலை செய்யும் ஆளுநரின் முடிவு முறையற்றது. எனவே, சாஹியை காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டு மேல்முறையீடு செய்வதற்கும் அனுமதியளித்தது.

இதுதொடர்பாக மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று நீதிபதிகள் என்.வி.ரமணா, எம்.எம்.சந்தானகவுடர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘எப்படி இதுபோன்ற குற்றவாளிகளை முன்னதாகவே விடுதலை செய்ய முடியும்? அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் 7 ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை அனுபவித்துள்ளார்.
Loading...
நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கக் கூடிய வழக்குகளில் நாங்கள் தலையிடுவோம். நாங்கள், எங்களது அதிகாரத்தைப் பயன்படுத்துவோம். அவருக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. எதற்காக அவர் விடுதலை செய்யப்பட்டார் என்று எங்களுக்குத் தெரியவில்லை. இதுகுறித்து நாங்கள் எதுவும் சொல்ல விரும்பவில்லை’ என்று கடுமையாக கண்டனங்களைத் தெரிவித்தனர்.

கோப்புப் படம்


சாஹி சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அம்ரேந்தர் சஹரான், ‘சாஹியை விடுதலை செய்ததற்கான காரணத்தை விளக்கவேண்டிய அவசியம் ஆளுநருக்கு இல்லை’ என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘பிணையில் வெளியில் இருந்த நேரத்தில்தான் சாஹி மேலும் நான்கு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏழு ஆண்டுகள் மட்டுமே சிறையில் கழித்துள்ளார். எப்படி அவரை முன்னதாக விடுதலை செய்ய முடியும்?’ என்று கேள்வி எழுப்பினர். சாஹி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார் என்று அவரது வழக்கறிஞர் வாதிட்டார்.

அதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், ‘என்ன பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார்? அவர் சிறையில் இருக்கும்போது, சிறையில் அவருக்குத் தேவையான சிகிச்சைகள் அளிப்பார்கள். ஆளுநரின் முடிவு நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கிவிட்டது. ஆளுநர் அவரது முடிவை கட்டாயம் மாற்றவேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

Also see:

First published: December 4, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...