10% இடஒதுக்கீடு தொடர்பான வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு

பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர் சாதியினருக்கான 10 விழுக்காடு இடஒதுக்கிட்டை எதிர்த்த வழக்கை, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10% இடஒதுக்கீடு தொடர்பான வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு
உச்ச நீதிமன்றம்
  • Share this:
பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர்சாதியினருக்கான 10 விழுக்காடு இடஒதுக்கிட்டை எதிர்த்த வழக்கை, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தை எதிர்த்து, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

சட்டத்துக்கு எதிராக 34 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மண்டல் கமிஷன் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக இந்த சட்டம் அமைந்துள்ளதாக மனுதாரர்கள் குற்றம்சாட்டினர். ஆனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய 2 கோடி பேருக்கான வாய்ப்புகளை உருவாக்கவே சட்டம் நிறைவேற்றப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.


விசாரணை கடந்த ஆண்டு ஜூலை மாதம் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வழக்கில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான அமர்வு, வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.
First published: August 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading