அரசு, நீதித்துறை, ராணுவத்தை விமர்சிப்பது தேசத் துரோகம் ஆகாது - உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா

"அரசியல் தலைவர்களை விமர்சிப்பது அவதூறு ஆகுமே தவிர தேசதுரோகம் ஆகாது"

அரசு, நீதித்துறை, ராணுவத்தை விமர்சிப்பது தேசத் துரோகம் ஆகாது - உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா
நீதிபதி தீபக் குப்தா
  • News18
  • Last Updated: September 10, 2019, 6:56 AM IST
  • Share this:
அரசு மற்றும் நீதித்துறை நிர்வாகம் குறித்து விமர்சிப்பது தேச துரோகம் கிடையாது என்று உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா கூறியுள்ளார்.

ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மோகன் பகவத்தை ஆகியோரை விமர்சித்த பாடகி ஹர்த் கவுர்ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்து.

இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா, கருத்து சுதந்திரத்தை பறிப்பதற்காக ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் தேச துரோக சட்டம் கொண்டுவரப்பட்டதாகவும், கடந்த சில ஆண்டுகளாக இந்த சட்டம் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.


அரசியல் தலைவர்களை விமர்சிப்பது அவதூறு ஆகுமே தவிர தேசதுரோகம் ஆகாது என்றும் கூறினார். மாற்றுக் கருத்து தெரிவிக்கும் உரிமை அரசமைப்பு சட்டத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய உரிமை எனக் குறிப்பிட்ட அவர், நீதித் துறை, ராணுவம் உள்ளிட்ட அரசின் இதர அமைப்புகளுக்கு எதிரான விமர்சனங்களை ஒடுக்க முயன்றால் இந்தியா சர்வாதிகார நாடாகிவிடும் எனவும் எச்சரித்தார்.

First published: September 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading