Justice Mohan M Shantanagoudar | உச்ச நீதிமன்ற நீதிபதி மோகன் எம் சாந்தனகவுதர் கொரோனாவால் உயிரிழப்பு?

உச்ச நீதிமன்ற நீதிபதி மோகன் எம் சாந்தனகவுதர்

கடந்த 2017 பிப்ரவரி 17ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார் நீதிபதி மோகன் எம் சாந்தனகவுதர், . அவர் 2023ம் ஆண்டு மே 4ம் தேதி ஓய்வு பெற இருந்தார்.

  • Share this:
உச்ச நீதிமன்ற நீதிபதி மோகன் எம் சாந்தனகவுதர் நுரையீரல் தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 62.

உச்ச நீதிமன்ற நீதிபதி மோகன் எம் சாந்தனகவுதருக்கு (வயது 62) நுரையீரலில் தொற்று பாதிப்பு காரணமாக குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடல்நிலையில் நோய்த்தொற்றின் தீவிரம் அதிகரித்ததால் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று நள்ளிரவில் அவர் காலமானதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நீதிபதி மோகன் எம் சாந்தனகவுதருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது அல்லது இல்லை என இரண்டையுமே உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் உறுதிப்படுத்தவில்லை.

நீதிபதி மோகன் எம் சாந்தனகவுதர் கடந்து வந்த பாதை:

கர்நாடக மாநிலம் தர்வாத் பகுதியைச் சேர்ந்தவரான நீதிபதி மோகன் எம் சாந்தனகவுதர் 1958ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி பிறந்தார்.

செப்டம்பர் 5 1980ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்து கொண்ட நீதிபதி மோகன் எம் சாந்தனகவுதர், 2003ம் ஆண்டு மே 12 அன்று கர்நாடக உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். 2004 செப்டம்பரில் நிரந்தர நீதிபதியாக்கப்பட்டார்.

இதன் பின்னர் கேரள உயர்நீதிமன்றத்துக்கு பணி மாறுதல் பெற்ற நீதிபதி மோகன் எம் சாந்தனகவுதர், ஆகஸ்ட் 1ம் தேதி 2016ல் கேரள உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், 2016 செப்டம்பர் 22ம் தேதி கேரள உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் நியமனம் செய்யப்பட்டார்.

கடந்த 2017 பிப்ரவரி 17ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார் நீதிபதி மோகன் எம் சாந்தனகவுதர், . அவர் 2023ம் ஆண்டு மே 4ம் தேதி ஓய்வு பெற இருந்தார்.
டெல்லியில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு - முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு

 

உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளார் நீதிபதி மோகன் எம் சாந்தனகவுதர். அவரின் மறைவால் சக நீதிபதிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். உயர்நீதிமன்ற , உச்ச நீதிமன்ற, கீழமை நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் நீதிபதி மோகன் எம் சாந்தனகவுதர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Published by:Arun
First published: