ரஃபேல் குறித்து தேர்தல் பிரசாரத்தில் பேச்சு... ராகுல் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு...!

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மீது கருத்து சொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என்று தெரிவித்த நீதிபதி ரஃபேல் விவகாரம் குறித்து பேசியதற்கு ராகுல் காந்தி ஏப்ரல் 22-ம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

news18
Updated: April 15, 2019, 12:20 PM IST
ரஃபேல் குறித்து தேர்தல் பிரசாரத்தில் பேச்சு... ராகுல் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு...!
ராகுல் காந்தி
news18
Updated: April 15, 2019, 12:20 PM IST
ரஃபேல் விவகாரம் குறித்து தேர்தல் பரப்புரையில் பேசியது தொடர்பாக ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அளித்தது. இது தொடர்பாக ஏப்ரல் 22-ம் தேதிக்குள் அவர் விளக்கமளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தேர்தல் பரப்புரையில் போது ராகுல் காந்தி ரஃபேல் விவகாரம் குறித்து பேசியுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஃபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை தவறாக ராகுல் காந்தி சித்தரிப்பதாக பாஜக எம்.பி., மீனாட்சி லெகி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய நீதிபதி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மீது கருத்து சொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என்று தெரிவித்த அவர் ரஃபேல் விவகாரம் குறித்து பேசியதற்கு ராகுல் காந்தி ஏப்ரல் 22-ம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Also see...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...