ஈகோ காரணங்களால் மோதலை நீட்டித்துக்கொண்டே இருக்கும் பெற்றோர்களுக்கு, உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள அறிவுரையில், குழந்தைகளின் குழந்தைப்பருவத்தை அழிக்கும் விதமாகவும், குழந்தைகளுக்குள் இருக்கும் பாசப்பிணைப்பை துண்டிக்கும் விதமாகவும் நடந்து அவர்களுக்கு தீங்கிழைக்க வேண்டாம் எனத் தெரிவித்துள்ளது.
”ஒருவரை ஒருவர் எதிர்ப்பதாகவும், அழிப்பதாகவும் கருதிக்கொண்டு இருக்கும் கணவன் மனைவி, தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தையும் அழிக்கிறார்கள். பெற்றோரின் சண்டைக்கு இடையில் அகப்பட்டு மனதால் கிழிக்கப்படும் குழந்தைகள், குழப்பமடைந்து, தங்களின் சகோதர பாசப்பிணைப்பையும் இழந்துவிடுகிறார்கள்" என குறிப்பிட்டிருக்கிறார் நீதிபதி சஞ்சய் கே.கவுல்.
தினேஷ் மஹேஷ்வரி மற்றும் ரிஷிகேஷ் ராய் இருக்கும் அமர்வு, ‘பெற்றோர்களின் ஈகோ காரணமாக குழந்தைகள் வதைக்குள்ளாகும் வழக்கைச் சந்திக்க வேண்டியிருப்பதற்கு மிகவும் வருத்தம் தருவதாகவுள்ளது’ என்று தெரிவித்தனர். வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் இதைத் தெரிவித்தனர்.
வழக்கு விசாரணையின்போது, “ஒரு காலத்தில் நீங்கள் காதலித்திருக்கிறீர்கள். மூன்று குழந்தைகள் உங்களுக்கு உள்ளனர். இப்போது உங்கள் நிலையைப் பாருங்கள். ஒருவரை ஒருவர் எதிர்கொள்ளும் நோக்கில், யாரைப்பற்றியும் நீங்கள் கவலைப்படவில்லை. குழந்தைகளைப் பற்றியும் கவலைப்படவில்லை. உங்கள் சொந்த மகிழ்ச்சியைப் பற்றியும் கவலைப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ego, Family Court, Family fight, Fight, Parenting, Parents, Property, Supreme court