'தப்லீக் ஜமாத் மாநாட்டால் ஏற்பட்ட அதே பிரச்னை விவசாயிகள் போராட்டத்தால் ஏற்படக்கூடும்' - நீதிமன்றம் கவலை

'தப்லீக் ஜமாத் மாநாட்டால் ஏற்பட்ட அதே பிரச்னை விவசாயிகள் போராட்டத்தால் ஏற்படக்கூடும்' - நீதிமன்றம் கவலை

விவசாயிகள் போராட்டத்தில் கொரோனா பரவாமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 2 வாரங்களில் பதிலளிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது

விவசாயிகள் போராட்டத்தில் கொரோனா பரவாமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 2 வாரங்களில் பதிலளிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது

  • News18
  • Last Updated :
  • Share this:
    மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லிக்கு செல்லும் சாலைகளை முடக்கும் வகையில், முகாம்கள் அமைத்து அங்கேயே போராடி வருகின்றனர்.

    பஞ்சாப், ஹரியானா மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக மழை, குளிர், வெயில் என எதனையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக போராடி வருகின்றனர்.



    இதனிடையே டெல்லியில் தப்லீக் ஜமாத் மாநாடு நடத்தியது, டெல்லி ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்தில் பொது முடக்கத்தின் போது ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் திரண்டது உள்ளிட்ட சம்பவங்களை சிபிஐ விசாரணைக்கு மாற்ற
    வேண்டுமென கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு இன்று விசாரித்தது.

    அப்போது தப்லீக் ஜமாத் மாநாட்டு நிகழ்வை டெல்லி விவசாயிகள் போராட்டத்துடன் ஒப்பிட்டு பேசிய நீதிபதிகள் தப்லீக் ஜமாத் மாநாட்டால் ஏற்பட்ட அதே பிரச்னை விவசாயிகள் போராட்டத்தால் ஏற்படக்கூடும். போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுக்கு கொரொனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா எனதெரியவில்லை. மத்திய அரசு இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.

    கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்யுங்கள் எனவும் கூறினர். விவசாயிகள் போராட்டம் கொரோனா பரவலுக்கு வழி வகுத்துவிடுமோ என்ற கவலையை நீதிபதிகள் வெளிப்படுத்தினர்.



    கடந்த ஆண்டின் தொடக்கத்தில் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் பல நாடுகளில் இருந்தும், பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். கொரோனா பரவல் இந்தியாவில் அதிகரிக்க
    இதுவும் ஒரு காரணமாக சொல்லப்பட்டது.

    இதனிடையே உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கேள்விக்கு பதிலளித்த மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் மேத்தா, விவசாயிகள் போராட்டத்தில் கொரோனா பரவாமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 2 வாரங்களில் பதிலளிக்கப்படும் என
    தெரிவித்தார்.
    Published by:Arun
    First published: