குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்றம்சாட்டி இந்தியா; தி மோடி கொஸ்டின் என்ற ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டது. இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிட கடந்த மாதம் 21-ம் தேதி மத்திய அரசு தடை விதித்தது.
குஜராத் கலவரம் தொடர்பாக செய்தி நிறுவனமான பிபிசி ஆவணப்படம் எடுத்துள்ளது. இந்தியா: மோடி கேள்விகள் என்ற தலைப்பில் 2 பகுதிகளாக பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட அந்த ஆவணப்படத்தின் முதல் பகுதியில் குஜராத் வன்முறைக்கு நேரடி பொறுப்பு அப்போதைய முதலமைச்சரும் இப்போதைய பிரதமருமான நரேந்திர மோடி என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், பிபிசி ஆவணப்படத்தின் 2-ம் பகுதியில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து ரத்து, டெல்லி வன்முறை, குடியுரிமை திருத்தச்சட்டம் உள்பட மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை விமர்சனம் செய்துள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்தின் பிபிசி நிறுவனம், இந்தியாவில் செயல்பட தடைவிதிக்க வேண்டும் என இந்து சேனா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த ஆவணப்படத்தின் பின்புலத்தில் இந்தியாவுக்கு எதிரான சதி உள்ளதா என கண்டறிய உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எம்.எம்.சுந்தரேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு தவறானது எனவும், நீதிமன்றம் எதையும் தணிக்கை செய்ய முடியாது எனவும் நீதிபதிகள் கூறினர்.நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் என காட்டமாக கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: PM Narendra Modi, Supreme court