Rafale Verdict: ரஃபேல் வழக்கு - அனைத்து சீராய்வு மனுக்களும் தள்ளுபடி

Rafale Verdict: ரஃபேல் வழக்கு - அனைத்து சீராய்வு மனுக்களும் தள்ளுபடி
  • News18
  • Last Updated: November 14, 2019, 11:53 AM IST
  • Share this:
ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான அனைத்து சீராய்வு மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்திய விமானப்படைக்காக பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை ரூ.58 ஆயிரம் கோடியில் வாங்குவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2016-ம் ஆண்டு ஜனவரியில் ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்தில் விமானத்தின் விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் முறைகேடு நடந்திருப்பதாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில் ரஃபேல் கொள்முதலில் எந்த ஊழலும் இல்லை  என்று உச்சநீதிமன்றம் 2018-ல் தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா, பிரசாந்த் பூஷண், அருண் ஷோரி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தனர்.


ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும் அதனை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அனைத்து சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

 


 
First published: November 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading