முகப்பு /செய்தி /இந்தியா / குஜராத் கலவரம் : பிரதமர் மோடிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

குஜராத் கலவரம் : பிரதமர் மோடிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

நரேந்திர மோடி

நரேந்திர மோடி

2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தில் அப்போது குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடிக்கு தொடர்பில்லை என்று சிறப்பு விசாரணை குழு அறிவித்த நிலையில், அதனை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :

உத்தரபிரதேசத மாநிலம் அயோத்திக்கு சென்று திரும்பிய கரசேவகர்கள் பயணித்த சபர்மதி ரயிலின் ஒரு பெட்டி குஜராத் மாநிலம் கோத்ராவில் 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி தீ வைத்து எரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறைகள் வெடித்தன. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தின்போது, ஆமதாபாத்தின் குல்பர்க் சொசைட்டி வளாகத்தில் நடந்த கலவரத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, எம்.பி., ஈஷான் ஜாப்ரி உட்பட 68 பேர் கொல்லப்பட்டனர்.

இதுதொடர்பான வழக்கில், அப்போது குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த, நரேந்திர மோடி உள்ளிட்டோர் மீது, சதி திட்டம் தீட்டியதாக, உயிரிழந்த ஈஷான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி வழக்கு தொடர்ந்தார். ஆனால், இதுகுறித்து விசாரணை நடத்திய சிறப்பு விசாரணை குழு, நரேந்திர மோடி உள்ளிட்ட 63 பேர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அறிவித்தது. இதை எதிர்த்து, ஜாகியா தொடர்ந்த வழக்கை குஜராத் உயர்நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு தள்ளுபடி செய்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்னர், 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி குறிப்பிடாமல் இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது.

Must Read : தேர்தல் ஆணையத்தில் இபிஎஸ்க்கு எதிராக ஓபிஎஸ் மனு

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து இன்று தீர்ப்பளித்துள்ளது.

First published:

Tags: Narendra Modi, Supreme court