ஆணுடன் பெண் விருப்பப்பட்டு உறவு வைத்தால் அது பலாத்காரமாகாது - உச்சநீதிமன்றம்

"திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு அதனை மீறுவதை தவறான வாக்குறுதியளித்து விட்டு ஏமாற்றியதாக எடுத்துக் கொள்ள முடியாது"

Web Desk | news18
Updated: August 22, 2019, 9:52 AM IST
ஆணுடன் பெண் விருப்பப்பட்டு உறவு வைத்தால் அது பலாத்காரமாகாது - உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்
Web Desk | news18
Updated: August 22, 2019, 9:52 AM IST
திருமணம் நிச்சயிக்கப்படாத நிலையில் ஆணுடன் பெண் விருப்பப்பட்டு உறவு வைத்திருப்பதை பலாத்காரமாக கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

வணிகவரித்துறை உதவி ஆணையராக பதவி வகித்து வரும் பெண்மணி தொடர்ந்த பாலியல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சந்திரசூட், இந்திரா பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிஆர்பிஎப் அதிகாரி ஒருவருடன் கடந்த 6 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்ததாகவும், தற்போது வேறு ஒரு பெண்ணுடன் அவர் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதாகவும் மனுதாரர் தரப்பில் குறிப்பிடப்பட்டது

எனவே, அவர் மீது பாலியல் புகாரின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாதிடப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதிகள், திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு அதனை மீறுவதை தவறான வாக்குறுதியளித்து விட்டு ஏமாற்றியதாக எடுத்துக் கொள்ள முடியாது என குறிப்பிட்டனர்.


மேலும், திருமணம் நிச்சயிக்கப்படும் முன்பாக விருப்பப்பட்டு உறவு கொள்வதை பாலியல் குற்றச்சாட்டாக கருத முடியாது எனவும் திட்டவட்டமாகக் தெரிவித்தனர்.

மேலும் படிக்க... தாய்ப்பாலின் முக்கியத்துவம்! மருத்துவரின் விளக்க
First published: August 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...