ஹோம் /நியூஸ் /இந்தியா /

'பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்' - உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

'பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்' - உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம்

இந்த வழக்குகளை நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தனர். நீதிமன்ற வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம்தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தது. இதனால் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக 57 பேர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்குகளை நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தனர். நீதிமன்ற வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இது குறித்து இன்று தீர்ப்பை வாசித்த நீதிபதிகள், இப்படியொரு முடிவை எடுப்பதற்கு மத்திய அரசிற்கு அதிகாரமுள்ளது என தீர்ப்பளித்தது. மேலும், பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறியதா இல்லையா என்பதை வைத்து அந்த நடவடிக்கையை தவறு என கூற முடியாது உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆதரவளித்து 4 நீதிபதிகளும், எதிர்த்து 1 நீதிபதியும் தீர்ப்பளித்ததால், பெரும்பான்மை அடிப்படையில், மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பு நடவடிக்கை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்பளித்தது.

5 நீதிபதிகளில் நீதிபதி நாகரத்னா மட்டும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Central government, Demonetisation, RBI, Supreme court