முகப்பு /செய்தி /இந்தியா / போராட்டம் என்ற பெயரில் ஓராண்டாக நெடுஞ்சாலைகளை முடக்கலாமா?- விவசாயிகளுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

போராட்டம் என்ற பெயரில் ஓராண்டாக நெடுஞ்சாலைகளை முடக்கலாமா?- விவசாயிகளுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டம்

போராட்டம் என்ற பெயரில் ஓராண்டாக சாலைகளை முடக்கலாமா என்று விவசாயிகளுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களை திரும்பப் பெறக் கோரி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியின் எல்லைப் பகுதியில் 9 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். எனினும் விவசாயிகளின் கோரிக்கையான 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முடியாது என்று மத்திய அரசு உறுதியாக இருந்து வருகிறது. விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

300 நாட்களுக்கும் மேலாக தொடரும் இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, டெல்லி- ஹரியாணா, டெல்லி - உத்தரபிரதேசம் நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நொய்டாவைச் சேர்ந்த மோனிகா அகர்வால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், “விவசாயிகளின் மறியல் போராட்டத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் எனஅனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த மறியல் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டும்" என அவர் கோரியிருந்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘ஒரு பிரச்சினைக்கு தீர்வு காண பல வழிமுறைகள் இருக்கின்றன. போராட்டத்தின் மூலமாகவோ, நாடாளுமன்ற விவாதங்கள் மூலமாகவோ பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். ஆனால், போராட்டம் என்ற பெயரில் கிட்டத்தட்ட ஓராண்டாக நெடுஞ்சாலைகளை எப்படி முடக்க முடியும்? எப்போது இந்த மறியல் முடிவுக்கு வரும்’ என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

First published:

Tags: Farm laws, Farmers Protest