போக்சோ சட்டம் தொடர்பாக சர்ச்சை தீர்ப்பு: மும்பை உயர் நீதிமன்ற பெண் நீதிபதியை நிரந்தரமாக்கும் ஒப்புதலை திரும்பப் பெற்ற உச்ச நீதிமன்ற கொலிஜியம்

போக்சோ சட்டம் தொடர்பாக சர்ச்சை தீர்ப்பு: மும்பை உயர் நீதிமன்ற பெண் நீதிபதியை நிரந்தரமாக்கும் ஒப்புதலை திரும்பப் பெற்ற உச்ச நீதிமன்ற கொலிஜியம்

உச்ச நீதிமன்றம்

ஆடைகளின் மேல் வழியே பாலியல் தொல்லை கொடுப்பது போக்ஸோ சட்டத்தின் கீழ் வராது என்று தீர்ப்பளித்த மும்பை உயர் நீதிமன்ற பெண் நீதிபதியை நிரந்தர நீதிபதியாக நியமிக்க அளித்த பரிந்துரையை உச்ச நீதிமன்ற கொலிஜியம் திரும்பப் பெற்றுள்ளது.

 • Share this:
  சதீஷ் என்ற 39 வயது நபர் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் விசாரணை அமர்வு நீதிமன்றம் அந்த 39 வயது நபரை குற்றவாளி என்று தீர்ப்பளித்து போக்சோ சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளித்தது. சதீஷ் என்ற அந்த நபர் சம்பந்தப்பட்ட சிறுமியை நாக்பூரில் தன் வீட்டுக்கு அழைத்து சென்று சாப்பிட ஏதாவது தருகிறேன் என்ற பெயரில் அவரிடம் தவறாக நடந்து கொண்டதாக வழக்கு எழுந்தது.

  ஆனால் அங்கு சதீஷ் சிறுமியின் மார்பைப் பிடித்து, அவரது ஆடையை அவிழ்க்க முயன்றுள்ளார். ஆனால், ஆடையைக் களையாமல்தான் அவர் சிறுமியின் மார்பைப் பிடித்துள்ளார் என்று நீதிபதி தன் தீர்ப்பில் கூறியிருப்பது விவாதப்பொருளாகியுள்ளது.

  அதாவது இருவரது சருமமும் நேரடித் தொடர்பில் இல்லை எனவே இது பாலியல் தாக்குதலாக எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறி 3 ஆண்டுகள் தண்டனையை ஒரு ஆண்டாகக் குறைத்துள்ளார். அதாவது பெண்ணின் மானத்துக்கு களங்கம் கற்பிக்க முயன்றார் என்ற அளவில்தான் தண்டிக்க முடியும் என்பதே அதன் தீர்ப்பு.

  போக்சோ சட்டத்தில் கூறியிருக்கும் உடல் ரீதியான தொடர்பு என்பது தோலுக்குத் தோல் தொடர்பைத்தானே தவிர உடல் ரீதியான தொடர்பு என்றாலே குற்றம் என்பதாக குறிப்பிடவில்லை என்றார் நீதிபதி. மும்பை நீதிபதியின் தீர்ப்புக்கு தேசிய அளவில் கடுமையான கண்டனங்கள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து, தேசிய மகளிர் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் அந்தத் தீர்ப்புக்கு தடைவிதித்தது.

  கடந்த 19-ம் தேதி நீதிபதி புஷ்பா கனேடிவாலா அளித்த தீர்ப்பில், “ 12 வயது சிறுமியின் ஆடையோடு மார்பகங்களை பிடிப்பது போக்ஸோ சட்டத்தில் பாலியல் குற்றாமாகாது. உடலோடுஉடல் தொடர்பில் இல்லை” எனத் தீர்ப்பளித்து குற்றம்சாட்டப்பட்டவரை விடுவித்தார்.

  கடந்த 15-ம் தேதி நீதிபதி கனேடிவாலா அளித்த தீர்ப்பில் “ 5 சிறுமியின் கைகளைப் பற்றுவதும், பேண்ட் ஜிப்பை திறக்கச் செய்யவைப்பதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் பாலியல் குற்றமில்லை எனக் கூறி தண்டனை பெற்றவரை விடுவித்து” தீர்ப்பளித்தார்.

  நீதிபதி புஷ்பா கனேடிவாலா அளித்த இரு தீர்ப்புகளும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அவர், 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் மும்பை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்துவருகிறார். இந்தநிலையில், அவரை நிரந்த நீதிபதியாக நியமிக்க அளித்த ஒப்புதலை உச்ச நீதிமன்ற கொலிஜியம் திரும்பப் பெற்றுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: