உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி ஆவாரா பிவி நாகரத்னா?

இந்தியாவில் பெண் தலைமை நீதிபதிக்கான குரல் நீண்ட காலமாகவே ஒலித்து வருகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பலரும் இந்த கருத்தை முன் வைத்துள்ளனர்.

இந்தியாவில் பெண் தலைமை நீதிபதிக்கான குரல் நீண்ட காலமாகவே ஒலித்து வருகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பலரும் இந்த கருத்தை முன் வைத்துள்ளனர்.

 • Share this:
  உச்ச நீதிமன்றத்துக்கு புதிதாக 3 பெண்கள் உட்பட 9 நீதிபதிகளை  உச்ச நீதிமன்ற கொலீஜியம்  பரிந்துரை செய்துள்ளது.

  70 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட இந்திய உச்ச நீதிமன்ற வரலாற்றில் இதுவரை எந்த பெண் நீதிபதியும் தலைமை நீதிபதியாக பொறுப்பெற்றது இல்லை. தற்போது உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரையுள்ள புதிய நீதிபதிகள் பட்டியல் இந்த  ஏக்கத்தை தீர்க்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனதுக்கு 9 பேர் அடங்கிய பட்டியலை உச்ச நீதிமன்ற கொலீஜியம்  மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.  கர்நாடக உயர் நீதிமன்றத்தின் நீதிபதி பிவி நாகரத்னா, தெலுங்கானா உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஹிமா கோலி மற்றும் குஜராத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி பெலா திரிவேதி ஆகிய பெண் நீதிபதிகளும் இதில் அடக்கம். இதேபோல்,  சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், கேரள உயர் நீதிமன்ற நீதிபதி சி.டி. ரவிக்குமார் உள்ளிட்டோரின் பெயர்களும் இந்த பரிந்துரை பட்டியலில்  இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

  மேலும் படிக்க: கருவை கலைக்க பெண்களுக்கு உரிமையுண்டு: கேரள உயர் நீதிமன்றம்!


  கடந்த  2008அம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட பிவி நாகரத்னா பின்னர் நிரந்தர நீதிபதியாக பணியமர்த்தப்பட்டார்.  இன்னும் பல ஆண்டுகள் பணிக்காலம் உள்ளதால் இந்தியாவின் முதல் உச்ச நீதிமன்ற பெண் தலைமை நீதிபதி ஆகும் வாய்ப்பு அவருக்கு உள்ளது. இவரது தந்தை ஈ.எஸ். வெங்கட்ராமைய்யா  1989 ஜூன் முதல் டிசம்பர் வரை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர்.

  இதையும் படிங்க: கேரளாவைச் சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் உட்பட 24 இந்தியர்களை விடுவித்த தாலிபான்!


  இந்தியாவில் பெண் தலைமை நீதிபதிக்கான குரல் நீண்ட காலமாகவே ஒலித்து வருகிறது.

  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.ஏ. போப்டா, தனது ஓய்வின்போது,  உச்ச நீதிமன்றத்துக்கு பெண் நீதிபதி தலைமை ஏற்கும் காலம் வந்துவிட்டதாக கூறியிருந்தார். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரமணாவும் இதே கூற்றை கூறியிருந்தார்.
  Published by:Murugesh M
  First published: