உச்ச நீதிமன்ற கொலீஜியம் உறுப்பினரான தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி...!

உச்ச நீதிமன்ற கொலீஜியம் உறுப்பினரான தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி...!
உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதி
  • News18
  • Last Updated: November 17, 2019, 3:54 PM IST
  • Share this:
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பணி ஓய்வு பெற்ற நிலையில், தமிழகத்தைச் சேந்த நீதிபதி பானுமதி கொலிஜியம் குழுவில் இடம்பெற்றுள்ளார்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, கொலீஜியத்தின் ஒரு உறுப்பினர் பதவி காலியானது. அந்தப் பதவியில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி பானுமதி இடம் பிடித்துள்ளார். 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஜொலீஜியத்தில் பெண் நீதிபதி ஒருவர் இடம் பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ரோகிண்டன் பாலி நாரிமன், ஆர்.பானுமதி ஆகிய ஐந்து பேர் கொண்ட கொலிஜியம் தான் இனிமேல் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை செய்யும்.


ரஞ்சன் கோகாய் | ranjan-gogoi
ரஞ்சன் கோகாய்


தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் இன்றுடன் ஓய்வு பெறவுள்ள நிலையில், புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே நாளை பதவி ஏற்றுக்கொள்கிறார். குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 9.15 மணிக்கு பதவி பிரமாணம் செய்துவைக்கிறார்.
First published: November 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்