ஹோம் /நியூஸ் /இந்தியா /

பாலியல் வழக்குகளில் இனி இரு விரல் சோதனை நடத்தக் கூடாது - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

பாலியல் வழக்குகளில் இனி இரு விரல் சோதனை நடத்தக் கூடாது - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

இரு விரல் சோதனைக்கு தடை

இரு விரல் சோதனைக்கு தடை

நாட்டில் இனி இருவிரல் பரிசோதனை நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  பாலியல் வன்முறைக்கு ஆளானவர்களுக்கு விரல் சோதனை நடத்தும் முறைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  இது தொடர்பாக வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி ஹிமா கோலி முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், பாலியல் பாதிப்புக்கு ஆளான நபரின் பாலியல் வரலாற்றை தெரிந்துகொள்ள இன்றும் இதுபோன்ற சோதனை நடத்தப்படுபடுவது வருத்தமளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

  எனவே, இரு விரல் சோதனைக்கு தடை விதிக்கப்படுகிறது. இதை உத்தரவு பின்பற்றபடுகிறதா என மத்திய, மாநில சுகாதாரத்துறை உறுதி செய்ய வேண்டும் என நீதிமன்றம் தனது உத்தரவு அறிவுறுத்தியுள்ளது. மேலும், இதனை உறுதி செய்ய அனைத்து மாநில காவல்துறை தலைவர்களும் தெரிவிக்க வேண்டும். இது தொடர்பான பயிலரங்குகளை நடத்த அறிவுறுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவில் தெரிவித்துள்ளது.

  இதையும் படிங்க: சாலை பள்ளத்தால் பறிபோன 22 வயது இளைஞரின் உயிர்: தொடரும் சோகம்

  இருவிரல் பரிசோதனை என்பது பெண்களின் பாலுறுப்புக்குள் இருவிரல்களை விட்டு கன்னித்திரை கிழியாமல் சரியாக இருக்கிறதா என்று சோதனை செய்யப்படும் முறையாகும். இந்த சோதனை ஆணாதிக்க மனோபாவம் கொண்டது எனவும், இதில் எந்த அறிவியல்தன்மையும் இல்லை எனவும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Supreme court, Supreme court judgement