முகப்பு /செய்தி /இந்தியா / மாட்டு வண்டி பந்தயத்துக்கு அனுமதி வழங்கியது உச்ச நீதிமன்றம்

மாட்டு வண்டி பந்தயத்துக்கு அனுமதி வழங்கியது உச்ச நீதிமன்றம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி பந்தயம் ஆகிய விளையாட்டுகள் முறையே தமிழகத்திலும் கர்நாடகாவிலும் நடைபெற்றுவரும் சூழலில் மகாராஷ்டிராவில் மாட்டுவண்டி பந்தயத்துக்கு தடை விதிப்பது சரியல்ல என மகாராஷ்டிர அரசு தரப்பில் வாதிடப்பட்டது. 

  • Last Updated :

மகாராஷ்ராவில்  மீண்டும் மாட்டு வண்டிபந்தயம் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மாட்டு வண்டி பந்தயம் நடத்த கடந்த 2017ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து பம்பாய் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தடையை நீக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மகாராஷ்டிரா அரசு கடந்த 2018ம் ஆண்டு இடைக்கால மனுவை தாக்கல் செய்தது.

நீதிபதி ஏ.எம். கான்வில்கர்தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது. இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, . விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், 1960ன் கீழ் அரசால் அறிவிக்கப்பட்ட திருத்தப்பட்ட விதிகள், நீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் மூலம் இறுதி முடிவு வரும் வரை பந்தயங்களை நடத்துவதற்குப் பொருந்தும் என்று நீதிபதி ஏ.எம். கான்வில்கர் கூறினார்.

ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி பந்தயம் ஆகிய விளையாட்டுகள் முறையே தமிழகத்திலும் கர்நாடகாவிலும் நடைபெற்றுவரும் சூழலில் மகாராஷ்டிராவில் மாட்டுவண்டி பந்தயத்துக்கு தடை விதிப்பது சரியல்ல என மகாராஷ்டிர அரசு தரப்பில் வாதிடப்பட்டது.  தமிழகமும் , கர்நாடகாவும் விலங்குகள் வதை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்ததையும் அவர்கள் சுட்டிக்காட்டினார்.  இதையடுத்து மாட்டுவண்டி பந்தயம் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதையும் படிங்க: இந்தியாவில் அதிகரிக்கும் ஒமைக்ரான் பரவல்: புதிதாக 9 பேருக்கு தொற்று உறுதி

top videos
    First published:

    Tags: Maharashtra, Supreme court