அம்பானி குடும்பத்திற்கு மத்திய அரசு தொடர்ந்து பாதுகாப்பு வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ரிலையன்ஸ் நிர்வாகத்தினருக்கு அரசு பாதுகாப்பு வழங்குவதை எதிர்த்து திரிபுரா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது.
இதுதொடர்பாக லைவ் லா, தளத்தில் வெளியாகியுள்ள அறிக்கையின்படி, தலைமை நீதிபதி ரமணா, நீதிபதிகள் கிருஷ்ணா முராரி மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு, பொதுநல மனு தாக்கல் செய்த மனுதாரரின் இருப்பிடத்தை கேள்வி எழுப்பியதுடன், திரிபுரா உயர்நீதிமன்றம் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்றும் கூறியது.
மேலும்,"தனிப்பட்ட பிரதிவாதிகள் இல்லை என்பது சர்ச்சைக்குரியது அல்ல. 2 முதல் 6 நபர்கள் இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் மிக முக்கியமான சில நிறுவனங்களின் நிர்வாகிகளாக உள்ளனர். அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை நம்ப மறுப்பதற்கான காரணங்கள் இல்லை என்று தலைமை நீதிபதி அமர்வு கூறியது.
அவர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பது ஏற்கனவே தெரியவந்ததால் தான் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மும்பை உயர் நீதிமன்றமும் இதற்கு முன்னர் பிரதிவாதிகளுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு தேவை என்பதை அறிந்து தான் அவர்களுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த சூழ்நிலையில், தனது இருப்பிடத்தை நிரூபிக்காத மூன்றாம் தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவிற்காக இந்த வழக்கை நாங்கள் தொடர விரும்பவில்லை, என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் அமர்வு கூறியது. அதேபோல், அம்பானி குடும்பத்திற்கு மத்திய அரசு தொடர்ந்து பாதுகாப்பு வழங்கலாம் என்றும், அத்தகைய பாதுகாப்புப் பாதுகாப்பிற்கான செலவினங்களைச் அம்பானி குடும்பம் செலுத்தும் என்று நீதிபதிகள் அமர்வு கூறியது.
முகேஷ் அம்பானிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பை எதிர்த்து, பிகாஷ் சாஹா என்பவர் திரிபுரா உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நல மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கும் பாதுகாப்பை உறுதி செய்தது.
திரிபுரா உயர்நீதிமன்றம், பிகாஷ் சாஹா என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு அடிப்படையில், மே 31 மற்றும் ஜூன் 21 ஆகிய தேதிகளில் இரண்டு இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்ததுடன், அம்பானி குடும்பத்தினருக்கான அச்சுறுத்தல் தொடர்பாகவும், அம்பானி, அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு எதன் அடிப்படையில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் உள்துறை அமைச்சகம் (MHA) பராமரிக்கும் அசல் கோப்பை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இதனிடையே, விடுமுறை கால பெஞ்ச், ஜூன் 29 அன்று, திரிபுரா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, திரிபுராவில் உள்ள மனுதாரர் பிகாஷ் சாஹாவுக்கும் மும்பையில் வழங்கப்படும் தனிநபர்களின் பாதுகாப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mukesh ambani, Reliance