Home /News /national /

இலவச திட்டங்களுக்கு எதிரான வழக்கில் திமுகவின் கோரிக்கையை ஏற்றது உச்ச நீதிமன்றம்

இலவச திட்டங்களுக்கு எதிரான வழக்கில் திமுகவின் கோரிக்கையை ஏற்றது உச்ச நீதிமன்றம்

ஆர் எஸ் பாரதி - உச்சநீதிமன்றம்

ஆர் எஸ் பாரதி - உச்சநீதிமன்றம்

இலவசங்களை வைத்து மட்டுமே தேர்தல்களில் யாரும் வெற்றி பெறுவதில்லை எனவும், இலவசங்களை தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு தோற்றுப்போன கட்சிகளும் உண்டு என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    இலவச திட்டங்களுக்கு எதிரான வழக்கில் மாநில அரசுகளை எதிர்மனுதாரராக சேர்க்குமாறு, திமுக சார்பில் ஆர்.எஸ் பாரதி அளித்த மனுவில் அரசியல் கட்சிகள் வாக்குறுதிகள் அளிப்பதை தடுக்க முடியாது என கூறியுள்ள உச்சநீதிமன்றம், இலவசங்களுக்கு எதிரான வழக்கில் திமுகவை எதிர்மனுதாரராக சேர்க்கவும் அனுமதி அளித்துள்ளது.

    இலவசங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மூத்த தலைவர் அஸ்வினி குமார் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவில் மத்திய அரசை மட்டுமே எதிர்மனுதாரராக சேர்த்துள்ளார் ஆனால், திட்டங்களை மாநில அரசுகள்தான் செயல்படுத்தி வருகிறது.

    இந்த வழக்கு நாடுமுழுதும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வழக்காக உள்ளது. எனவே, மாநில அரசுகளை மனு தாரர்களாக சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்து திமுகவையும் எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

    இதுதொடர்பான வழக்கு தலைமை நீதிபதி ரமணா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குழு அமைத்து மாநில அரசுகளின் பொருளாதார நிலையை ஆராய்ந்து, எவ்வளவு இலவசங்கள் வழங்கலாம் என இறுதி செய்ய வேண்டும் என மனுதாரர்கள் கோரிக்கை வைத்தனர்.

    தொடர்ந்து, திமுகவின் கோரிக்கையை ஏற்று, வழக்கில் அக்கட்சியை எதிர்மனுதரராக இணைக்க நீதிபதிகள் அனுமதி அளித்தனர். தேர்தல் அறிக்கைகளில் வெளியிடப்படும் இலவசங்களை வைத்து மட்டுமே தேர்தல்களில் யாரும் வெற்றி பெறுவதில்லை எனவும், இலவசங்களை தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு தோற்றுப்போன கட்சிகளும் உண்டு என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.

    கல்வி, குடிநீர், குறைந்தபட்ச மின்சார அலகுகள் போன்ற வாக்குறுதிகளை இலவசங்கள் என கூற முடியுமா எனவும், நுகர்வோர் பொருட்கள் மற்றும் இலவச மின்சாதனங்களை நலத்திட்டங்கள் என கூற முடியுமா என்றும் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    இலவசங்களை சிலர் பண விரயம் என்பார்கள், சிலர் நலத்திட்டம் என்பார்கள் என்றும் கூறிய அவர், ஆதரவோ, எதிர்ப்போ முதலில் அனைத்து தரப்பு கருத்துகளையும் சனிக்கிழமைக்குள் சமர்ப்பிக்க ஆணையிட்ட உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணையை வரும் திங்கட் கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
    Published by:Raj Kumar
    First published:

    Tags: DMK, RS Barathi, Supreme court

    அடுத்த செய்தி