ஹோம் /நியூஸ் /இந்தியா /

கொள்கைக்கு கோட்சே, டூருக்கு காந்தியா - பாஜகவுக்கு சிவசேனா கடும் கண்டனம்

கொள்கைக்கு கோட்சே, டூருக்கு காந்தியா - பாஜகவுக்கு சிவசேனா கடும் கண்டனம்

கொள்கை ரீதியாக கோட்சேவை ஆதரித்து, வெளிநாட்டு தலைவர்களை காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு அழைத்து செல்வது எப்படி என மத்திய பாஜக அரசுக்கு சிவ சேனா கேள்வி எழுப்பியுள்ளது.

கொள்கை ரீதியாக கோட்சேவை ஆதரித்து, வெளிநாட்டு தலைவர்களை காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு அழைத்து செல்வது எப்படி என மத்திய பாஜக அரசுக்கு சிவ சேனா கேள்வி எழுப்பியுள்ளது.

கொள்கை ரீதியாக கோட்சேவை ஆதரித்து, வெளிநாட்டு தலைவர்களை காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு அழைத்து செல்வது எப்படி என மத்திய பாஜக அரசுக்கு சிவ சேனா கேள்வி எழுப்பியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  சிவ சேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், பாஜகவை கடுமையாக சாடி கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், " பாஜக நாதுராம் கோட்சேவின் கொள்கைகளை ஆதரித்துக் கொண்டே, இந்தியா வரும் வெளிநாட்டு தலைவர்களை காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு அழைத்து செல்வது எப்படி என ஆச்சரியமாக உள்ளது.  சொல்லப்போனால் அதே குஜராத்தில் தான் இரும்பு மனிதரான சர்தார் பட்டேலுக்கு மிக உயரமான சிலை பாஜகவால் கட்டப்பட்டது.

  ஆனால், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்பட யாரையும் சர்தார் பட்டேல் சிலைக்கு மத்திய பாஜக அரசு அழைத்து செல்வதில்லை. காரணம், தற்போதும் இந்தியாவின் அடையாளமாக உலக அளவில் காந்தியே இருக்கிறார்" எனக் கூறியுள்ளது.

  அண்மையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இரு நாள் பயணமாக இந்தியா வந்தார். முதல் நாள் பயணத்தின் போது குஜராத் வந்த போரிஸ் ஜான்சன் அங்குள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றார். பொதுவாக வெளிநாட்டு தலைவர்கள் இந்தியா வருகை தரும்போது சபர்மதி ஆசிரமத்திற்கு தவறாமல் செல்வது வழக்கம். இதை குறிப்பிட்டே மத்திய அரசை சிவ சேனா சாடியுள்ளது.

  இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீர் செல்லும் பிரதமர் மோடி - பாதுகாப்பு ஏற்பாடு குறித்து NIA தலைவர் ஆய்வு

  அத்துடன் நாட்டில் நிலவும் மத மோதல் குறித்தும் பாஜகவை சிவ சேனாவின் சாம்னா நாளேடு கட்டுரை சாடியுள்ளது. அதில், "பிரதமர் ஜான்சன் இந்தியா வந்த வேளையில் கூட தலைநகர் டெல்லி உள்பட நாட்டின் பல பகுதிகளில் மத மோதல் காணப்பட்டன. இந்தியா விடுதலை அடைந்த காலகட்டத்தில் நாட்டில் மத வெறுப்பு மற்றும் வன்முறை காணப்பட்டது. விடுதலை அடைந்து இத்தனை ஆண்டுகள் கழித்து பிரிட்டன் பிரதமர் இந்தியா வந்துள்ள இந்த வேளையிலும் நாட்டில் மத மோதல் அப்படியே உள்ளன. பிரிட்டிஷ்காரர்கள் விட்டுச் சென்ற அதே இடத்தில்தான் நாடு இன்னும் அப்படியே உள்ளதாக ஜான்சன் இந்தியாவை பார்த்திருப்பார்" என சாம்னா கட்டுரை தெரிவித்துள்ளது.

  கடந்த வாரம் ராம நவமி, அனுமன் ஜெயந்தி விழாக்களில் நடைபெற்ற ஊர்வலத்தில் டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மத மோதல் வெடித்தது. குறிப்பாக டெல்லி ஜாஹாங்கிர்பூர் பகுதியில் பெரும் மோதலில் இரு காவலர்கள் காயமடைந்தனர்.

  மகாராஷ்டிராவில் பாஜக-சிவ சேனா கூட்டணி கடந்த முறை ஆட்சி நடத்திய நிலையில், 2019ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் முடிவுக்குப் பின் முதலமைச்சர் பதவி வேண்டும் என சிவ சேனா சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு பாஜக சம்மதிக்காத நிலையில், கூட்டணியை விட்டு வெளியேறி, எதிர் எதிர் துருவங்களாக இருந்த தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்து சிவ சேனா ஆட்சி நடத்தி வருகிறது. மாநில முதலமைச்சாரக சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்ரே உள்ளார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: BJP, Shiv Sena