Home /News /national /

பஞ்சாபில் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு குளறுபடி... விசாரணை நடத்த சிறப்பு குழுவை அமைத்தது உச்ச நீதிமன்றம்

பஞ்சாபில் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு குளறுபடி... விசாரணை நடத்த சிறப்பு குழுவை அமைத்தது உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

பாதுகாப்பு குளறுபடி குற்றச்சாட்டு குறித்து பதில் அளித்த பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, பிரதமரின் பாதுகாப்புக்காக உயிரை விடவும் தான் தயாராக இருப்பதாக கூறினார்.

    பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு, உச்ச நீதிமன்றம் சிறப்புக்குழுவை அமைத்துள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி இந்த குழுவுக்கு தலைமை வகிப்பார் என்றும், இதுதொடர்பான மேலதிக விபரங்கள் விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கடந்த புதன் கிழமையன்று பஞ்சாபுக்கு சென்றார். அப்போது அவர் சாலை மார்க்கமாக சென்ற வழியில் விவசாயிகள் போராட்டம் நடத்தியிருந்தனர். இதையடுத்து, பாதுகாப்பு காரணமாக மேம்பாலம் ஒன்றில் சுமார் 20 நிமிடங்கள் மோடி காத்திருந்தார்.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த பாதுகாப்பு குளறுபடிகளுக்கு பஞ்சாப் அரசே காரணம் என்று மத்திய அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. ஹெலிகாப்டரில் செல்லவிருந்த மோடி கடைசி நேரத்தில் தனது பயணத்தை சாலை மார்க்கமாக மாற்றியதை தங்களுக்கு தெரிவிக்கவில்லை என்று பஞ்சாப் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    இதையும் படிங்க : அரசியல் ஆதாயத்துக்காக மேகதாது பாதயாத்திரை - காங்கிரஸ் கட்சியை விளாசும் கர்நாடக முதல்வர்

    பாதுகாப்பு குளறுபடி குற்றச்சாட்டு குறித்து பதில் அளித்த பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, பிரதமரின் பாதுகாப்புக்காக உயிரை விடவும் தான் தயாராக இருப்பதாக கூறினார். பஞ்சாபில் இருந்து திரும்பிச் செல்லும்போது விமான நிலையத்தில் அதிகாரிகளிடம் பேசிய பிரதமர் மோடி, தன்னை உயிருடன் திருப்பி அனுப்பியதற்காக பஞ்சாப் முதல்வருக்கு நன்றி தெரிவித்ததாக கூறுங்கள் என்று தெரிவித்திருந்தார்.

    இதையும் படிங்க : உத்தரப்பிரதேசத்தில் கொரோனா பரவல் 13 மடங்கு அதிகரிப்பு...

    இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இன்று நடந்த விசாரணையின்போது தலைமை நீதிபதி என்.பி.ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா கோலி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

    அப்போது மத்திய அரசு தரப்பில் வாதாடிய தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, நடந்த சம்பவங்களுக்கு பஞ்சாப் அரசே காரணம் என்று குற்றம் சாட்டினார். பாதுகாப்பு தொடர்பான தகவல்களை மாநில அரசு பிரதமர் மோடிக்கு அளிக்கவில்லை என்று கூறினார். இதனை ஏற்க மறுத்த பஞ்சாப் அரசு வழக்கறிஞர் டி.எஸ். பாட்வாலியா, இந்த விவகாரத்தை சுதந்திரமான விசாரணை அமைப்பு விசாரிக்க வேண்டும் என்று கூறினார்.

    இதையும் படிங்க : நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் அதிர்ச்சி!

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பஞ்சாபில் பிரதமர் மோடிக்கு நேர்ந்த பாதுகாப்பு குளறுபடி குறித்து விசாரணை நடத்துவதற்கு முன்னாள் நீதிபதி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்படும் என்று தெரிவித்தனர். இந்த குழுவில் பஞ்சாப் டிஜிபி, தேசிய புலனாய்வு அமைப்பின் ஐ.ஜி., உளவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: PM Modi, Punjab

    அடுத்த செய்தி